பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 157

பிண்ட நெல்லின் அள்ளு ரன்ன எம்

ஒண்டொடி -அகம். 64/12 அள்ளுர் நன்முல்லையார்

மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்

கொற்கை அம்பெருந்துறை முத்தின் அன்ன

நகைப்பொலிந்து இலங்கும் எயிறு கெழுதுவர்வாய்.

-அகம். 27; 7-10

மதுரைக் கணக்காயனார்.

பலர்புகழ் திருவில் பசும்பூண் பாண்டியன் அணங்குடை உயர்நிலைப் பொருப்பின் கவாஅன் சினைஒண் காந்தள் நாறும் நறுநுதல் துணையீர் ஓதி மா அயோள் -அகம். 338, 5-8 மதுரைக் கணக்காயனார்.

1.2.11. இவ் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்ட உவமை கள் புறப்பாடல்களினும் அகப்பாடல்களிலேயே மிகுதியாக வந்துள்ளன. அவற்றுள்ளும் அகநானூற்றிலும் நற்றிணை யிலுமே மிகுதியாக இடம் பெற்றுள்ளன. அகநூனுற்றில் 60, நற்றிணையில் 44, குறுந்தொகையில் 21, ஐங்குறுநூற்றில் 16, கலித்தொகையில் 8, பதிற்றுப்பத்தில் 7, பரிபாடலில் 16, புறநானூற்றில் 7, பத்துப்பாட்டில் 12 இடங்களில் வந்துள்ளன. புலவர்களுள் பரணரே மிகுதியாக வரலாற்று நிகழ்ச்சிகளை உவமையில் அமைத்துள்ளனர். மாமூலனார், அம்மூவனார் கபிலர் ஆகிய இம்மூவரும் அடுத்த நிலையில் குறிப்பிடத் தக்கவர்கள் ஆகின்றனர்; ஏனைய புலவர்கள் மிக அருகியே வரலாற்று உவமைகளைக் கையாண்டுள்ளனர். எனவே இவ் வரலாற்று உவமைகள் மிகக் குறைந்த அளவில் புறப் பொருளிலும் மிக்க அளவில் அகப்பொருள் செய்திகளிலும் இடம்பெற்றுள்ளன என்பதும், ஒருசில புலவர்களாகிய பரணர், மாமூலனார், அம்மூவனர், கபிலர் ஆகிய இவர்களே மிகுதியாக இவ் வரலாற்று உவமைகளை அமைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.'

1.3. உவமையில் கலைச் செய்திகள்

ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டு மக்கள் போற்றிய கலைகளால் விளங்கும் எனக் கூறலாம். தமிழகப் புலவர்கள்

1. இத் தலைப்பின் ஈற்றில் புலவர்கள் பெயரு அவர்கள் பாடிய