பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சங்க இலக்கியத்தில் உவமைகள்

பொன்னும் மணியும் போலும் யாழதின் தன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்.

-நற். 166/1-2

இத்தகைய அமைப்பை உடைய பல எடுத்துக்காட்டு

களைச் சங்க இலக்கியத்தினின்று காட்ட முடிகிறது. மிகுதி பற்றி

ஒரு சிலவே ஈண்டுக் காட்டப்படுகின்றன.

பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல். -நற் 10/1-2

மணியேர் நெய்தல் மாமலர் நிறையப் பொன்னேர் நுண்தாது புன்னை தாஅம்.

-நற் 78/2-3

பொன்னுடை மணியன்ன மாமை. -கலி, 48/17

பொன்வாய் மணிச்சிரல். -பத். 3/1-1

இவ்வமைப்புப் பெருகிய வழக்காக உள்ளது.

12.3.2. மகளிரைப் பாவைக்கும் அவர்கள் உறையும் இல்லினை ஒவியத்திற்கும் உவமைப்படுத்தி இணைத்துக் கூறல் ஒரு மரபாக உள்ளது.

ஒவத் தன்ன இடனுடை வரைப்பில்

பாவை அன்ன நப்புறங் காக்கும்

சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்.

-நற். 18/2-4

ஒவத்தன்ன வினைபுனை நல்லில் பாவை அன்ன நல்லோள் கணவன். -பதிற். 61/3-4

ஒவத் தன்ன உருகெழு நெடுநகர் பாவை அன்ன மகளிர் நாப்பண். -பதிற்.

ஒவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை அன்ன பலராய் மாண்கவின். -98/11-12

ஒவத் தன்ன இடனுடைவரைப்பு பாவை அன்ன குறுந்தொடி மகளிர். -புறம். 251/12

12.3.3. ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய இவை ஐந்தும் இணைத்துக் கூறப்படுதல் ஒரு