பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சங்க இலக்கியத்தில் உவமைகள்

கலையுணர்ச்சியில் மிக்கவர்கள் என்பது அவர்கள் அமைத்த உவமைகளாலும் விளங்குகின்றது. ஒவியம், சிற்பம், யாழ், குழல், முழவு, முரசு, வயிர், வங்கியம் முதலிய இசைகளிலும், ஆடற்கலையிலும் நுட்ப உணர்வும் அறிவுத் திறனும் மிக்கவர் களாக விளங்கினார்கள் என்பது அவர்கள் அமைத்த உவமச் செய்திகளால் விளங்குகின்றது.

1.3.1. ஒவியம் என்பது அவர்கள் நுகர்ந்து துய்த்த எழில் மிக்க கலையாக விளங்கியது. இயற்கையை ஒவியத்திற்கு உவமப்படுத்தி மகிழ்ந்துள்ளனர். அழகிய வடிவங்களை ஒவிய மாகவும், சிற்பமாகவும் கண்ட காட்சி அவர்கள் உவமைகளில் வெளிப்படுகின்றது.

1.3.1.1. இயற்கை எழில் ஒவிய எழிலைப் போல உள்ளது என்று கூறும் மரபு காணப்படுகிறது. இவ்வாறு கூறுவது பெருகிய வழக்காகும். இதனைக் கீழ்வரும் சான்றுகள் காட்டும்.

வனைபுனை எழில்முலை -பத், 10/57 ஊட்டி யன்ன ஒண்தளிர்ச் செயலை -அகம். 68/5

ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பு -அகம். 388/24

பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் உதிர்த்துப் பின்னுற ஊட்டுவார் விருப்பும் பல்லூழ் இவையிவை நினைப்பின் வல்லோன்

ஒவத்து எழுதுஎழில் போலும் -பரி. 21/25.28

வல்லோன் எழுதி யன்ன காண்டகு

வனப்பின் ஐயள் மாயோள் -நற். 146/8-10

எழுதி யன்ன திண்ணிலைக் கதவம் -அகம். 311/3 முன்றில் எழுதி யன்ன கொடி -அகம். 296/13-14.

1.3.1.2. ஒவியங்களுக்கே ஒரு சில பொருள்கள் நேரிடையாக உவமிக்கப்பட்டுள்ளன.

ஒவுக் கண்டன்ன இருபெரு நியமத்து -பத், 6/365 ஒவத் தன்ன உண்துறை மருங்கு -பத். 3/70 புனையா ஒவியம் கடுப்ப. நல் அடி -பத். 7/147-51