பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 159

ஒவு உறழ் நெடுஞ்சுவர் -பதிற். 68/17

ஒவத் தன்ன கோபச் செந்நிலம் -அகம். 54/4

ஒவியத்தை வீடுகளுக்கு உவமித்தல் பெருகிய வழக்காகும்.

ஒவத் தன்ன இடனுடை வரைப்பு -நற். 182/2

ஒவுக் கண்டன்ன இல்வரை -நற். 268/4

ஒவத் தன்ன வினைபுனை நல்லில் -அகம், 93/11;

-பதி. 61/3

ஒவத் தன்ன உருகெழு நெடுநகர் -பதி. 88/28.

1.3.1.3. ஒவியம் உணர்த்தும் செய்தி ஒரே உணர்வும் ஒரே செய்தியும் கொண்டதாக விளங்கும் என்னும் நுட்பத்தை

'ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி - அகம். 5/17 என்னும் தொடரால் குறிப்பிட்டுள்ளனர். இஃது அவர்கள் ஒவியச் செய்தியின் அமைப்பையும் சிறப்பையும் உணர்ந்த நுட்ப அறிவினைக் காட்டுகின்றது.

1.3.1.4. மேலே காட்டிய சான்றுகள் அவர்கள் ஒவியங் களில் கொண்ட ஈடுபாட்டையும், அழகிய பொருள்களை ஒவியத்திற்கு உவமைப்படுத்தும் மரபியலையும் உணர்த்து கின்றன. ஒவியத்தையும், சிற்பத்தையும் உடன் சேர்த்து இணைத்துக் கூறுதலும், அவற்றை முறையே வீட்டிற்கும் அதில் உறையும் மகளிர்க்கும் உவமைப்படுத்தலும் குறிப்பிடத் தக்க மரபாக விளங்கின. இது பின்வரும் சான்றுகளால் புலனா கின்றது.

ஒவத் தன்ன வினைபுனை நல்லில்

பாவை அன்ன பலராய் மாண்கவின் அகம். 98/10-11

ஒவத் தன்ன இடனுடை வரைப்பில் பாவை அன்ன நப்புறம் காக்கும் -நற்; 182/2-4

ஒவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை அன்ன நல்லோள் கணவன் -பதி. 61/3-5

ஒவத் தன்ன உருகெழு நெடுநகர் பாவை அன்ன மகளிர் நாப்பண் -பதி. 88/2-29