பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.3.4. வயிர், நெடுவங்கியம் என்னும் ஊது கருவிகளின் ஒசை வேறுபாட்டை உணர்ந்து அவற்றைத் தக்க வகையில் உவமச்செய்திகளாக அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்க செய்தி யாகும் வயிர் என்னும் ஊது கருவி அன்றிலின் அகவலுக்கும், மயிலின் அகவலுக்கும். நாரையின் வினிக் குரலுக்கும் கிளி யின் விளிக்கும் உவமைப்படுத்தியுள்ளனர். நெடுவங்கியம் என்னும் ஊது கருவியின் ஒசை யானையின் நெட்டுயிர்ப்புக்கு ഉഖങ്ങഥധiിലുഞ്ജ' விளிக்கு வயிரும், நெட்டுயிர்ப்புக்கு வங்கியமும் உவமையாகியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தி யாகும்.

1.3.5. பண்ணின் திறங்களும் தாள வகைகளும் நன்கு உணர்ந்தவர்கள் என்பதும், அவற்றின் நுட்ப வேறுபாட்டை உணர்ந்து தக்க ஒசைகளுக்கு உவமைப் படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும்.

1.3.5.1. இளி என்னும் குரலோசை பருந்தின் விளிக்கு உவமையாகி உள்ளது.

வீளைப் பருந்தின் கோள்வல் சேவல் வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும் இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம். -அகம். 33/57. 1.3.5.2. இவ்வாறே கொளை வாலை முதலிய இசை களின் வேறுபாட்டை உணர்த்தி அவற்றை முறையே வண் டுக்கும் சுரும்புக்கும் உவமைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்க செய்தியாகும். யாழில் எழுப்பும் கொளை இசைக்கு ஏற்பச் சுரும்பு பாலைப் பண்ணை இசைத்துப் பாடுவதாகவும், அவ் விசைக்கு ஏற்பத் தும்பியினம் சிறகு விரித்து ஆடுவதாகவும் அழகிய காட்சி தரப்பட்டுள்ளது.

பூவூது வண்டினம் யாழ்கொண்ட கொளைகேண்மின் கொலைப்பாருள் தெரிதரக் கொளுத்தாமற் குரல்கொண்ட கிளைக்குற்ற உழைச்சுரம்பின் கேழ்கெழுபாலை

இசையோர்மின் பண்கண்டு திறனெய்தாப் பண்தாளம் பெறப்பாடிக் கொண்டவின் னிசைத்தாளம் கொளைச்சீர்க்கும்

விரித்தாடும் தண்டும்பி இனங்காண்மின் - பரி.11/1513

1. பத் 8/219. 2. அகம் 177/10.11 பத் 7/9899.

3. அகம் 40/1415. 4. நற் 304/34. 5. ஐங். 377/12.