பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 163

1.3.5.3. மற்றும் விளர் இசை வலம்புரிச் சங்குகளின் முழக்கத்திற்கும் தேரின் மணியோசைக்கும் உவமையாக அமைந்துள்ளது.

விருந்திற் பாண்ர் லிளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும்.

-நற். 172/7

சிறுநா ஒண்மணி விளரி ஆர்ப்ப.

-குறு. 336/38

1.3.6. ஆடற் கலையிலும் அதனை இயக்கிய விறலியரின் தோற்றத்திலும் அவர்களுக்கு மிக்க ஈடுபாடு இருந்தது என்பது அவர்கள் அமைத்த உவமச் செய்திகளில் புலனாகிறது. மலைச் சாரலில் ஆடும் மயில்களுக்கு விறலியின் ஆடல் உவமையாகி யுள்ளது.

கழைவளர் அடுக்கத் தியலியாடும் மயில் நவைப்புகு விறலியின் தோன்றும்

-அகம். 82/910

4.4. உவமையில் அறவியல் செய்திகள்

உவமையில் வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றதைப் போல அற நீதிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க செய்தி யாகும். பிற்கால நீதி நூல்கள் உருவாகுவதற்கு இக் கருத்துகள் அடிப்படையாக விளங்கின. காவியங்களும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களும் அறநீதிகளை வற்புறுத்த எழுந்தன எனக் கூறலாம். இவற்றின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இவ் அற நீதிக் கருத்துகள் முன்னோடியாக அமைந்தன எனக் கூறலாம். சங்க இலக்கியத்தில் மிகப் பிறகாலத்தது என்று கருதப்படும் கலித்தொகையிலேயே அற நீதிகளை உணர்த்தும் உவமைகள் மிகுதியாக அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி யாகும்.

1.4.1. நீதிகளும் தத்துவ உணர்வுகளும் வாழ்க்கையின் அனுபவத்தில் எழும் முதிர்வுச் செய்திகளாகும். பயின்று பழகித் தேர்ந்து தெளிந்து அறியப்படும உண்மைகளையே அற நீதிகள்