பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 167

யின் உயர்வு' புறங் கூறாமை' எளியோரை இதழாமை' உயிர்க்கொலை செய்யாமை, கற்பின் உயர்வு: பெண் கொலை செய்யாமை' முதலிய பொதுவறங்கள் வற்புறுத்தப் படுகின்றன.

1.4.7. நல்லறம் செய்வோர் நல்லுலகம் அடைவர் என்பதும், அல்லறம் செய்வோர் அருநரகு செல்வர் என்பதும் வற்புறுத்தப்படுகின்றன.

1.5. உவமையில் கடவுளர் செய்திகள்

சங்க இலக்கிய உவமைகளுன் வரலாற்றுச் செய்திகள் பெற்றிருந்த இடத்திற்கு ஒப்ப ஒரளவு கடவுளர் செய்திகளும் ஒரு சில இடம் பெற்றிருந்தன என்பது தெரிகிறது. பிற்காலப் புராணக் கதைகளும், இராமாயண இதிகாசக் காப்பியங்களும் எழுவதற்கு வேண்டிய அடிப்படைகள் முதற்கண் இவ் உவமைகளில் தோன்றின என்று கூறலாம். புராணங்களும் தெய்வக் கதைகளும் தனி நூல்களாகப் பிற்காலத்தில் எழுந்ததைப் போலச் சங்க காலத்தில் அவற்றிற்குச் சிறப்பிடம் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். எனினும் உவமைகளுள் ஒரு சில இடங்களில் இச்செய்திகள் இடம் பெற்றமை நோக்க அக்காலத்த மக்களின் மன இயல்பை அவை புலப்படுத்துகின்றன எனக் கூறலாம்.

1.5.1. தெய்வங்களுள் சிவன், திருமால், முருகன், இந்திரன், திருமகள், வள்ளி, அருந்ததி ஆகியோர் உவமையில் இடம் பெற்றனர். அருந்ததியைக் கற்பிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்டமை பெருகிய வழக்காகும்.

1.5.2. ஏனைய நூல்கள் வரலாற்றுச் செய்திகளுக்கும் அகப்புறப் பொருட் செய்திகளுக்கும் தலைமை இடம் தரக் கலித்தொகை எழுந்த காலத்து மக்களின் போக்கு, ஏனைய காலத்து மக்களின் மன நிலைக்கு மாறு பட்டது என்பதைக்

கலி 130/67 2. கலி 25/1316; 1920; 2324 கலி 120/516; 120/1819 4. நற். 304/810; கலி 120/1012; 143/1013 நற். 15/710 6. குறு 292/16 பரி, 19/1011; கலி. 118/2ண3 8. குறு 292/16 ஐங் 442/35; 161|1819; பதி 31/2728; 89/1920 கலி 2/21; புறம் 22/8; பத் 4/302303