பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சங்க இலக்கியத்தில் உவமைகள்

காட்டுகிறது. கலித்தொகையில் எந்தக் குறிப்பிட்ட அரசரின் பெயரும் வரலாறும் இடம் பெறவில்லை என்பதும் இதே கருத்தை வற்புறுத்துகின்றது.

1.5.3. 'கூற்றுவன்' என்ற உருவகக் கடவுள் சங்க இலக்கியத்தில் மிகுதியாகப் பேசப்படுகிறது. கொடுமை தருவன எல்லாம் கூற்றுவனாக உருவகிக்கப்பட்டன. இவற்றுள் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிவபெருமான் கூற்று' என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது குறிப்பிடத்தக்க செய்தியாகும் கொல்லும் தொழிலில் ஆற்றல் மிக்கவர்கள் எல்லாம் கூற்றுவராக உவ மிக்கப்பட்டனர். காலன், மறலி,” என்பன கூற்றினைக் குறிக் கும் வேறு சொற்களாகும்.

1.5.5. முருகனும் வள்ளியும், இன்பமும் அன்பும் நிறைந்த காதல் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக உவமையாயினர். உமை யும் சிவனும் இவ்வாறு உயர்வு இடம் அளிக்கப்டுகின்றனர்." உரோகிணியும் அவர் காதலன் ஆகிய சந்திரனும் இணைபிரியாக் காதலுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்பட்டனர் என்பது தெரி கிறது.'

1.5.6. பாரதக் கதைகளுள் வீமனுக்கே மிக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது." அருச்சுனன் ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடப்படுகின்றான்." மற்றும் ஏனைய சிலபாரதக் கதைக் குறிப்புகளும்." கண்ணனின் இளமையைக் குறிக்கும் பாகவதக் கதைக் குறிப்புகளும், ஒரு சில இடம் பெற்றுள்ளன.

1.5.7. அக்குரன்' என்பான் ஒருவன் வள்ளன்மையைக் குறிக்க உவமையாகக் குறிக்கப்படுகிறான். அவன் யார் என்பது தெளிவாகப் புலப்படவில்லை. அவன் கவுரவர்க்கு உதவினான் என்பதும், கொடையாளி என்பதும் தெரிகிறது. அவன் பாண்டவர்களுள் மூத்தவனாகிய கன்னனாக இருத்தல் கூடும் என்று கருதப்படுகிறது.

1. குறு 197/45, 283/5 பதி 26/1314; 13/1112; 14/10, 51/3537; 84/7; பரி 2/50; 11/400; கலி 56/79; 105:3533; 129; 9: புறம் 3|1213; 19/4:42/2324; 38/7, 294/3:362/7; பத் 1/81, 6/633; 10/206210.

2. புறம் 56/11. 3. 39/8; 23:17, ஐங் 116/34. 4. புறம் 13/4. 5. பதி 15/3940; புறம் 56/13; 57/2; 174/6. 6. கலி 104/810; 105/911; புறம் 56/36.

7. கலி. 26/34. 8. நற் 82/35. 9. கலி 92|1819,

10. பத் 7/163. 11. கலி 25/111; 52/14; 101/1820.