பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சங்க இலக்கியத்தில் உவமைகள்

3.1. வெளிப்படையாக உவமமும் பொருளும் இயைத்துக் கூறப்படும் உவமமேயன்றிப் பாட்டின் கருப் பொருளைத் துணையாகக் கொண்டு பெறப்படும் உள்ளுறை இறைச்சிகள் உவமையையும் குறிப்புப் பொருளையும் தரும் கருப்பொருள்களை மட்டும் பெற்று இயங்கும்.

அவறோடு இணைத்துப் பொருத்தப்பெறும் பொருட் செய்திகள் அப்பாட்டின்கண் இடம்பெறா.

3.2.உள்ளுறையும் இறைச்சியும் தொல்காப்பியர் காலத்தி லேயே போற்றப்பட்ட உவமைப் பொருள் நயஉத்திகளாகும். தொல்காப்பியர் காட்டி விளக்கும் இவ்உத்திகள் அகப்பொருள் இலக்கியத்திற்கே உரியனவாகப் போற்றபட்டன. சங்க இலக் கியங்களிலும் அகப்பொருள் பாடல்களிலேயே இவை இடம் பெறுகின்றன.

3.3. உள்ளுறை என்பது கருப்பொருளின் துணை கொண்டு பெறப்படும் குறிப்பு உவமையாகும். இஃது அகப் பொருளுக்கே உரியது என்ற அடிப்படையில் தொல்காப்பி யத்தில் அகத்திணையியலிலும் பொருளியலிலும் விளக்கப்படு கிறது. உவமை என்ற அடிப்படையில் இதன் இயல்பு உவமை யியலில் ஆராயப்படுகிறது.

3.4. தொல்காப்பியர் தரும் விளக்கத்தின்படி உள்ளுறை பற்றி அறியப்படுவன கீழ்வருமாறு:

3.4.1.திணையை உணர்வதற்கு உள்ளுறை உவமம் பெரிதும் துணை செய்யும் என்பர்.

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத் தள்ளா தாகும் திணையுணர் வகையே.

-தொல். அகத். 46

3.4.2. கருப்பொருள்கள் என்று கிளக்கப் பெறுபவற்றுள் தெய்வம் நீங்கலாக ஏனைய பொருள்களை ஒட்டியே உள்ளுறை பிறக்கும் என்பர்.

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்

கொள்ளு மென்ப குறியறிந் தோரே.

- அகத் 47(தொல்)

3.4.3. கருப்பொருளோடு ஒத்துப்பொருள் கொள்ளும்

வகையில் இவ்உள்ளுறைச் செய்திகொள்ளப்படுகின்றது.