பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சங்க இலக்கியத்தில் உவமைகள்

3.4.7. உவமை என்ற அடிப்படையில் உள்ளுறையை ஆராயுமிடத்து அது பொருளோடு இயைபுகொள்ளும் பொழுது ஐவகை தன்மைகள் சுடடப்படுகின்றன,பொதுவாக உவமைக் குரிய பொதுத் தன்மைகள் ஆகிய இவற்றோடு பிறப்பு என்பதும் சேர்த்துக் கூறப்படுகிறது.

தவலருஞ் சிறப்பீன் அத்தன்மை நாடின்

வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்

பிறப்பினும் வருஉந் திறத்தியல் என்ப

-தொல்.பொருள்.300

3.4.3. உள்ளுறை பாடல் மாந்தர்களின் கூற்றுகளில் அமைவதாகும். அப்பாடல்கள் அனைத்தும்கவிஞன் கூற்றாக அமையாமல் பாடல் மாந்தரின் கூற்றாக அமைவனவாகும். இது நாடக நூல்களில் அமையும் பெற்றியாகும். அகப்பாடல்கள் இவ்வகையில் நாடக இயல்பு கொண்ட தனிக்க்டற்றுகள் எனப் பொதுவாகக் கூறலாம். கலித்தொகைப் பாடல்களும் ஒரு சில இருவர் உரையாடும் பகுதிகளையும் கொண்டு விளங்கு கின்றன. நாடகத்தில் இரட்டுறமொழிதல் என்னும் உத்திதோன்ற உரையாடல்கள் அமைவனவற்றை இரு, பொருள் அமைப்பு என்று சிறப்பிப்பர். இதில் நாடகமாந்தர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசக் கேட்போருக்கு ஒரு பொருளும், நாடகத்தைப் பார்ப்போருக்கு மற்றொரு பொருளும் தோற்று வித்து உரையாடும் திறனைக் காட்டுவர். இதைப் போன்ற அமைப்பே இவ் உள்ளுறை உவமத்தில் காணப்படு கின்றது. வெளிப்படையாக உணர்த்தப்படும் கருப்பொருள் செய்தியே அன்றிக் குறிப்பாகப் புலப்படுத்தப்படும் உரிப்பொருள் செய்தி யும் தோற்றுவிக்கப்படுகிறது.இக் கூற்றினைக் கேட்பவர் நிறைவையும் குறையையும் எடுத்துக்காட்டும் வகையில் இக் குறிப்புப் பொருள் அமையும் என்பர். இந் நுட்பத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் சுட்டிக் காட்டுவர்.

இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்

அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப

-தொல்.உவம.330 3.4.9. ஆசிரியர் தொல்காப்பியனார் உள்ளுறை உவமம் கிளக்கப்படும் இடங்களும், அவற்றைக் கூறும் பாடல் மாந் தரும், கிளக்குமாறும் சுட்டிக் காட்டிiள்ளமை குறிப்பிடத் தக்க