பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சங்க இலக்கியத்தில் உவமைகள்

நச்சினார்க்கினியர் இவ்வேறுபாட்டினை நுட்பமாக உணர்த்து

கின்றார். இவ் இரண்டாம் வகைக்கு ஆதாரமாகக் கீழ்வரும்

சூத்திரத்தைக் காட்டுவர்;

இறைச்சியில் பிறக்கும் பொருளு மாருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே. -தொல்.230

இஃது உவமை வழி அமையும் இறைச்சி என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். -

3.5.2. உவமை வழியாக அமையும் இறைச்சிக்கும் உள்ளுறைக்கும் உள்ள வேறுபாடு மிக நுட்பமானதாகும். உள்ளுறையில் உவமமும் உண்டு:இறைச்சியும் (குறிப்புப் பொருளும்) உண்டு. இறைச்சியில் குறிப்புப் பொருளும் உண்டு உவமும் உண்டு. இவை இரண்டிற்கு முள்ள ஒற்றுமைப் பண்புகளாம். இவற்றை உள்ளுறை என்றோ இறைச்சி என்றோ கொள்வது கொள்வோரின் மன நிலையைப் பற்றியதாகும். உவமைக்குத் தலைமையும் சிறப்பும் கொடுத் தால் அவை உள்ளுறை உவமம் எனக் கொள்ளபடுகின்றன. இவையே இவ் இரண்டிற்கு முள்ள அடிப்படை வேறுபாடுகள் எனலாம்.

4.0. சங்க இலக்கிய உள்ளுறை இறைச்சிப் பகுதிகளை ஆய்ந்து பார்க்கும் பொழுது ஒரு சில சிறப்புச் செய்திகள் பெறப்படுகின்றன. அவற்றின் விளக்கம் அவ்வந் நூல்களுக்குத் தரும் உரைக் குறிப்புகளாலேயே புலப்படுகின்றது.

4.1. உள்ளுறையும் இறைச்சியும் அமைய இடனாக நிற்கும் கருப்பொருள்கள் பொழுதும் இடமும் ஆகிய முதற் பொருள்களுக்கு அடையாக நின்று அவற்றைப் பெரும்பாலும் சிறப்பிக்கின்றன. நிலத்தைக் குறிக்கின்ற மலை, துறை, ஊர், சுரன், காடு முதலிய சொற்களும் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகிய இவற்றை உணர்த்தும் காலச் சொற்களும் முடிக்கும் சொற்களாக அமையக் கருப்பொருளும் முதற்பொருளும் இயைந்து நிற்கின்றன. இளம்பூரணர் உரையும் இக் கருத்து களையும் கொண்டே பாடல் திணைகளையும் வகுக்க இயல் கின்றது. குறுந்தொகைப் பாடல்களின் பதிப்பில் அவற்றின் திணைத் தலைப்புத் தரப்படவில்லை எனினும் இக் கருப் பொருள்கள் சாரும் முதற்பொருள்களைக் கொண்டு அவற்றின் திணைகளை நிறுவ இயலுகின்றது.