பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை இறைச்சி 179

42. குறிஞ்சித் திணைப் பாடல்களுள் கருப்பொருள்களை அடையாகக் கொண்டு முடியும் முதற் பொருள் கானக நாடன், வெற்பன், சிலம்பன், மலைகிழவோன் என்பன பயின்று வருகின்றன; மருத நிலப் பாடல்களுள் ஊரன் என்பது மிகுந்து வழங்குகிறது; பாலை நிலப்பாடல்களுள் அத்தம், நெறி, அருஞ்சுரம் முதலியன பயின்று வழங்குகின்றன; முல்லை நிலப் பாடல்களில் புறவு, பாக்கம் என்பன பயின்று வருகின்றன; நெய்தல் நிலப் பாடல்களில் சேர்ப்பன், புலம்பன், துறைவன், கொண்கன், கானலன் முதலியன பயின்று வழங்குகின்றன. பொழதுகளுள் நடுநாள், மாலை, காலை, அச்சிரம், கார், வாடை முதலியன பயின்று வழங்குகின்றன.

4.3. உள்ளுறை இறைச்சி ஆகியவற்றுள் உள்ளுறைப் பகுதிகளே உரையாசிரியர்களால் மிகுதியாகக் காட்டப் பட். டுள்ளன. அகநானுாற்றில் இறைச்சி என்பது சுட்டப்படவே இல்லை, நற்றிணையிலும் கலித்தொகையிலுமே இறைச்சி ஆங்காங்கே சுட்டப்படுகின்றன. பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டில் மட்டும் உள்ளுறை வருமிடங்கள் இரண்டு என்று தெரிகிறது. இறைச்சி சுட்டப்படவே இல்லை. ஐங்குறு நுாற்றில் பெரும்பாலும் உள்ளுறைகவே காட்டப்படுகின்றன. இரண்டு இடங்களில் மட்டும் உள்ளுறை என்பதும் இறைச்சி என்பதும் வெளிப்படையாகக் கூறப்படுகின்றன. குறுந் தொகையில் உரைப் பகுதியில் உள்ளுறை என்றோ இறைச்சி என்றோ சுட்டாமல் பொதுவாகக் குறிப்புப் பொருள் என்று தரப்படுகின்றது. -

4.4. உள்ளுறைக்கு விளக்கம் சங்கப் பாடல்களை எடுத்துக் காட்டாகத் தந்து உரையாசிரியர்கள் விளக்கி உள்ளனர். அவர்கள் வழியே நின்று உள்ளுறைப் பொருள் பெறப்படும் நிலையை எடுத்துக்காட்ட இயலும்.

4.4.1. வினையுவமப் போலிக்குக் கீழ்வரும் பகுதி

சான்றாகக் காட்டப்பட்டுள்ளது:

கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல் சுரும்புபசி களையும் பெரும்புன லூர. - ஐங்.65/12

இதற்குத் தரும் விளக்கம்: 'இது வினையுவமப் போலி என்பர்; என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசி தீர்க்கு முரன் என்றாள். இதன் கருத்து: அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்று அமைக்கப்பட்ட