பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i82 சங்க இலக்கியத்தில் உவமைகள்

4.5.4. முன்னிரண்டு எடுத்துக்காட்டுகளில் பொருள் உவமை வழியாக அமையவில்லை என்பதும், சூழ்நிலை ஒட்டிக் கொள்ளப்படும் குறிப்புப் பொருள் என்பதும்தெலிய வருகின்றன. பின்னிரண்டு எடுத்தக் காட்டுகளுள் சூழ்நிலை ஒட்டி அமைந்த பொருளாயினும் அவை உவமை வழியாகவே அமைந்துள்ளன என்பதும் தெரியவருகிறது.

4.6. பொருட் புறத்தனவாக அமையும் இறைச்சிப் பொருள்களில் வியப்புணர்ச்சியோ இரக்க உணர்ச்சியோ தலை சிறந்து விளங்குகிறது என்பது உரையாசிரியர்கள் காட்டும் உரை விளக்கத்தால் தெரியவருகிறது.

4.6.1. 'பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு'-நற். 1025 இதற்குத் தரும் இறைச்சிப் பொருளாவது: "என்னைக் கை விட்ட கொடுமையை உடையவர் சாரலாய் இருந்தும் அச் சாரலின் கண் உள்ள பலாமரங்கள் பிறர்க்கும் பயன் படுமாறு கமழ்கின்றனவே. இஃது என்ன வியப்போ' எனப் பொருட் புறத்தே இறைச்சி தோன்றியது அறிக. இதில் வியப்புணர்ச்சி தலைசிறந்து விளங்குகிறது.

4.6.2. 'மணியின் தோன்றும் இம்மலை கிழவோன்'

-நற் 173/67.

இதற்குத் தரும் இறைச்சிப் பொருள் 'ஒன்றினேம்யாம் என்று புகல்புக்க எம்மைக் கைவிட்ட அன்னோன் மலை யாயிருந்தும் நீலமணிபோலத் தோன்றி விளங்காநிற்கும். இஃது என்ன வியப்போ' எனப் பொருளின் புறத்தே தோன்றியதாம். இதிலும் வியப்புணர்ச்சி வற்புறுத்தப்படுகிறது.

4.6.3."செந்நெல் அஞ்செறுவில் அன்னம்துஞ்சும்

பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டன்ன'நற்73/89

உரை விளக்கம் : 'செறுவில் அன்னம் துஞ்சும் என்றது யானும் சேக்கையின்கண்ணே அவர் மார்பில் துஞ்சியிருந்தேன். இப்போழுது அஃது இல்லை போலும்" என்று இரங்கியதாம். இதில் இரக்க உணர்ச்சி வற்புறுத்தப் படுகிறது.

4.6.4."முதைச்சுவல் கிளைத்த பூழி மிகப்பல

நன்பொன் இமைக்கும் நாடனொடு' -நற்.389/910 உரை விளக்கம்: கோழிகிளைத்த பூழியிடத்து நன்பொன் இமைக்கு மென்றது செல்வக் குறைபாடிலனாதலால் எமர்க்கு வேண்டும் பொருள் கொடுத்து என்னை மணம் புரிந்து கொண்டான் இல்லையே என்றிரங்கியதாம்' இதில் இரக்க உணர்ச்சி வற்புறுத்தப்படுகிறது.