பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 சங்க இலக்கியத்தில் உவமைகள்

உவமைக்கு இடனாக அமையவில்லை தெய்வத்தின்பால் அவர்கள் கொண்டிருந்த மதிப்பும் உயர்வும் இதனால், புலப்படுகின்றன. உவமையில் வைத்துப் பேசக்கூடிய எளிய பொருள்களாக அவர்கள் தெய்வத்தைக் கருதவில்லை என்பது தெரிகிறது. தெய்வத்தைப் பற்றிய செய்திகளைக் கொண்டு பெறப்படும் உவமச் செய்திகளை உள்ளுறை இறைச்சியாகக் கொண்டனர் என்பதும், நற்றிணை உரையாசிரியர் தரும் குறிப் பால் விளங்குகிறது. அதனால் உள்ளுறையினின்று வழுவி வரும் உவமப் பகுதிகளெல்லாம் இறைச்சியாகக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. நற்றிணை உரையாசிரியர்தரும் குறிப்புகள் பின்வருமாறு:

'சூரரமகள் எனத் தெய்வத்தை இடையிட்டு உரைத் தமையின் உள்ளுறை அன்மை உணர்க'நற்.4/15உரை.

'ஏனை உவமம் ஆயினும் ஞாயிற்றுப் புத்தேளை உவமித்தமையின் இஃது உள்ளுறை அன்மை உணர்க” -நற்.163/712உரை.

4.10. உள்ளுறை உவமத்தில் குறிப்புப் கொருள் தலை சிறந்து நிற்குமானல் அஃது இறைச்சி ஆகக் கொள்ளப்பட்டது என்பது கீழ்வரும் நற்றிணை உரைக் குறிப்பால் தெரியவருகிறது. 'சிறைப்புறம் என்றதால் அவனறியும் ஆற்றானே கூறினன் ஆதலின் இவ்வாறு உள்ளுறையும் இறைச்சி கொள்ளலா யிற்று'. நற்372/10-13உரை. எனவே உள்ளுறையே இறைச்சி ஆகும் என்பதும் தெரிகிறது.

4.11. உள்ளுறை என்பதும் கவிஞன் தெரிந்து அமைப்பதா அன்றிக் கொள்பவரின் கற்பனை ஆற்றலா என்று முடிவு செய்வது எளியது அன்று. குறுந்தொகையில் வரும் ஒரு பாட்டில் உரிப் பொருளே கூறப்படாமல் கருப்பொருளும் முதற்பொருளும் மட்டும் அமைந்த பகுதி காணப்படுகிறது. உரிப் பொருள் இல்லையெனில் அப்பாட்டு முழுமை பெறாது. உரிப் பொருள் இன்றித்தமிழ் அகப்பாடல் அமைவது இல்லை என்பது தமிழ் இலக்கிய மரபாகும். ஈண்டு உள்ளுறையால் கொள்ளப்படும் செய்தியே உரிப் பொருளாக அமைகிறது. எனவே உள்ளுறை இறைச்சி என்பன கவிஞனின் கற்பனை ஆற்றலாலேயே அமைவது என்பதற்கு இப்பாடல் சான்று தருகிறது.

மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையொடு வதியும் நிழல்முதிர் இலஞ்சிப் பழனத்து அதுவே கழனித் தாமரை மலரும் கலின்பெறுசுடர் நுதல் தந்தை ஊரே - ஐங்.94/1-5