பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சங்க இலக்கியத்தில் உவமைகள் மள்ளரும் மகளிரும் :

மள்ள ரன்ன தடங்கோட் டெருமை மகளிரன்ன துணையொடு வதியும். -ஐங். 94/1-2 களிறும் பிடியும் :

பிடிமிடை களிற்றில் தோன்றும் குறுநெடுந் துணைய குன்றம். -அகம் 99|13-14

மானும் பிணையும் :

சிறுதலைப் பிணையின் தீர்ந்த அறுகோட்டு இரலை மானையும் காண்பர்கொல் நமரே. குறு. 183/2-4 அன்றிலும் இணையும் :

நெருப்பி னன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு.

-குறு. 160/1-2 மகன்றிலும் இணையும் :

குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைத் காதலோரே. -ஐங். 381/4-5 அன்னமும் பெடையும் :

மென்னடை பேடை துணைதரத் தற்சேர்ந்த அன்னவான் சேவல் புணர்ச்சி போல.

-கலி, 147/65-66 மீனும் மதியும் :

மதிசூழ் மீனின் தாய்வழிப் படுஉஞ் சிறுகுடி மறவர். -அகம். 297/15-16 கடலும் கானலும் :

கல்லறை கடலும் கானலும் போலவும். -பரி. 15/11 இருளும் நிலவும் :

இருள் திணித் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் நிலவுக் குளித்தன்ன வெண்மணல். -குறு. 123/1-2 புலியும் யானையும் :

இரும்புலி தொலைத்த பெருங்கை வெஞ்சின உருமின் உரறும் யானை அஞ்சுவரு சிறுநெறி. -நற். 453/9-11