பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 19

எனவே இவ்வாறு இணைத்துக் கூறுதல் சங்ககால மரபாக விளங்குவதால் இணைப்பு உவமை அணி என்ற ஓர் அணிவகையை அமைத்துக் காட்டலாம் என்பதும், இது சங்க கால உவமைகளின் சிறப்பியல்புகளுள் ஒன்று ஆகும் என்பதும் கூறலாம்.

12.4 இரட்டை உவமை

தொல்காப்பியச் சொல்லியலில் இரட்டைக் கிளவி என்ற தொடர் விளக்கப்படுகிறது. வந்த அசையே திரும்ப வருவது இரட்டைக் கிளவி எனப்படும். அவை பிரிந்திசையா எனவும் கூறப்படுகிறது. அதே போல உவமவியலில் இரட்டைக் கிளவி என்பதைப் புகுத்துகின்றார்.

'இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே'- தொல்.கு. 293 என்று கூறி அடையும் அது சிறப்பிக்கும் பொருளும் வருவதுபோல உவமையிலும் அடையும் பொருளுமாக இயைந்து வரும் என்று கூறுவர்.

இவ்வாறு உவமைகள் இரட்டைக் கிளவியாக வருதல் சங்க இலக்கியத்தில் பெருகிய வழக்ககாக உள்ளது. இதனை ஓர் அணியாகவே மாறனலங்காரம் போற்றி இரட்டை உவமை எனச் சிறப்பிக்கின்றது.

அடையொடு பொருட்கு அடைபுணர்க்கும் அஃதிரட்டை. -மாறன். சூ. 103

'இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரை எழுதும் உரை யாசிரியர்கள் இரட்டைக் கிளவியும் ஒரு பொருளை உவமை யாகப் பெறுதல் உண்டு என்று காட்டுவர்.

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும். குறு. 47/1-2 என்பதைக் காட் டுவர். வேங்கை மலர் உகுந்து வீழும் பொற்றைக்கல் புலிக்குட்டியைப் போல் தோன்றும் என்பது இதன் கருத்தாகும்.

பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின்

புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பு. பத். 4/222-223

1. பிற்குறிப்பு 2-இல் வருமிடங்கள் தரப்பட்டுள்ளன. 2. தொல் சூ. 293 வரை