பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சங்க இலக்கியத்தில் உவமைகள்

இதனை இரட்டைக் கிளவிக்கு எடுத்துக் காட்டாகக் காட்டுவர். சண்பின் காயின் சுண்ணம் பூசப்பெற்ற மார்பு பொன்துகள் படிந்த உரைகல்லை உவமையாகப் பெற்றுள்ளது.

இரட்டைக் கிளவிகள் சங்க இலக்கியத்தில் பயின்று வரும் உவமையாகும். ஈண்டு ஒவ்வொரு நூலினின்று ஒவ்வோர் எடுத்துக் காட்டுத் தரப்படுகின்றது.

நற்றிணை :

நீரின்று அமையா உலகம் போலத் தம்மின்று அமையாநந்நயந்து அருளி. -நற். 1/6-7 குறுந்தொகை

சிறுகோட்டுப் பெரும் பழம் தூங்கியாங் கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. -குறு. 1814-5

ஐந்குறுநூறு

அம்பணத் தன்ன யாமை யேறிச் செம்பின் அன்ன பார்ப்புப்பல துஞ்சும். -ஐங். 43/1-2

பரிபாடல்

கல்லறை கடலும் கானலும் போலவும் புல்லிய சொல்லும் பொருளும் போலவும். -15/11-12

கலித்தொகை

குன்றுஅகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றில் திங்களுள் தீத்தோன்றியற்று.

-கலி, 41/23-24

அகநானூறு

வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம். அகம் 12/11-12

புறநானூறு

குன்றத் திருந்த சூரீஇயினம் போல - அம்புசென் றிறுத்த அரும்புண் யானை, புறம். 19/89