பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 23

களைக் கொண்டு இயங்குகின்றன. பிறிது மொழிதலில் உவமச் செய்திகள் மட்டும் கூறப்படும்; பொருள் அவற்றோடு புணர்த்தப்படாது, இவற்றில் பொருள் புணர்த்தப்படும். இதுவே எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் பிறிது மொழிதல் அணிக்கும் உள்ள வேறுபாடாகும் எனலாம்: பிறிது மொழிதல் அணி பின்னர்க் காட்டப்படும்.

ஒரே எடுத்துக்காட்டைக் கூறுதல் பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பொது இயல்பு எனலாம். பல எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கூறுகூது சங்க இலக்கியத்தின் தனிச் சிறப்பாகும். எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கூறி அவற்றை உவமையாக அமைத்தல் எடுத்துக் காட்டுவமை அணி ஆகும். உவம உருபு கெடாமல் இவ்உவமை அமைதல் சிறப்பு என்பர்.

12.6.1. பாண்டிய மன்னன் போர்க்களம் புகுந்தால் யாரும் அவனை எதிர்க்க முடியாது என்பது சொல்ல வந்த கருத்தாகும். அதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தரப்படு கின்றன. நீர் அளவுக்கு மீறி மிகுந்தால் அதனைத் தடுத்து நிறுத்த அணைகள் அமைக்க இயலாது. தீ மிகுந்தால் அதனின்று உயிர்களைக் காக்கும் வழியே இல்லை. காற்று மிகுதியாக வீசினால் அதனை யாரும் தடுக்க இயலாது. இம்மூன்று செய்திகளைக் கூறி அவற்றிற்கு நிகராக அரசன் சினம் கொண்டு சீறி எழும் இயல்பு சிறப்பிக்கப்படுகின்றது.

நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி. -புறம். 51/1-4

ஈண்டு 'அவற்றோர் அன்ன' என உருபு கொடுக்கப் பட்டுள்ளது.

12.6.2. இதே போன்ற கருத்துடைய பாடல் மற்றொன்று புறநானூற்றில் வந்துள்ளது. மலைச்சாரலில் மறப்புலி மாறு பட்டால் அதனை எதிர்க்கும் மான்கூட்டம் இல்லை. ஞாயிறு உருத்து எழுந்தால் அதன் முன் இருள் நிற்காது. நுண்ணிய மணல் தெறிக்கவும் கல் பிளக்கவும் நடக்கும் எருதுக்கு ஒரு குறிப்பிட்ட துறை இல்லை. இவற்றைப் போல அரசன் போரில் எதிர்த்து நின்றால் அவனை எதிர்க்கும் வீரர்கள் இல்லை என்று