பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சங்க இலக்கியத்தில் உவமைகள்

இதில் உணர்த்தப்படும் கருத்தும் அதற்கு அமைந்துள்ள உவமையும் சிறந்த மணியைப் போல் ஒளி பெற்று விளங்குகின்றன. அனைவருக்கும் தெரிந்த செய்தியையும் உயர்ந்த ஒர் கருத்தினையும் விளக்க அமைந்திருப்பது இதன் தனியழகாகும்.

முத்தும் மணியும் பொன்னும் சேர்ந்த அணிஒளிபெற்றுத் திகழும், சான்றோரும் தம் புகழால் ஒளிபெற்றுத் திகழ்வர் இவ்விருவருக்கும் உள்ள ஒற்றுமைப் பண்பு இது எனினும் உடைந்த அணிகளைத் திருத்த முடியும், புகழ் கெட்டால் அதனைத் திருத்த முடியாது என்பது இரண்டுக்கும் உள்ள வேறுபாடு. இதில் வேற்றுமை அணியும் கலந்துள்ளது. உவமை யைக் கூறிப் பொருளை வேறுபடுத்திக் காட்டி இருப்பது இதன் அழகை மிகுவிக்கின்றது. பிற இடங்களிலும் இவ்வமைப்பும் வந்துள்ளது.

12.7 எதி மறுப்பு உவமை அணி அல்லது விலக்கு உவமை அணி

உவமைகளை முதற்கண் அமைத்து அவற்றைக் காரணம் கூறி மறுத்துக் கூறலும் உண்டு. அதனை எதிர் மறுப்பு உவமை அணி என்று கூறலாம்.

12.7.1. இவ்விலக்கு உவமை அணி கலித்தொகையில் தனித்து வருகின்றது. வழக்கமாகக் கூறப்படும் நிலவு, மூங்கில், குவளைமலர், மயிர், கிளி முதலியவை தலைவியின் பல்வகை அழகுகளுக்கு உவமையாகக் கூறப்பட்டு அவை பொருந்தா என்று விலக்கும் எதிர்மறைக் கூற்று உடன் அமைகிறது. இவ்வாறு மறுப்பதால் உவமைகளிலும் பொருள் உயர்ந்தது என்னும் கருத்தைத் தோற்றுவிக்க முடிகிறது.

தலைவன் தலைவியின் நலத்தை வியந்து பாராட்டு கின்றான். அவளைத் தனித்துக் கண்டு நில் என்க் கூறி அவள் நெற்றியையும் முகத்தையும் தோள்களையும் கண்களையும் மெல்லிய சாயலையும் இனிய சொற்களையும் கண்டு வியக் கின்றான். பிறகு அவற்றைத் தக்க உவமைகளோடு பொருத்திக் காண்கிறான். அவை அவனுக்கு மனநிறைவு தருவதாக இல்லை. அவற்றை விலக்கிப் பொருந்தா என்று கூறிவிடுகின்றான்.

1. பிற்குறிப்பு 3ல் காண்க.