பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 31

ஒருதிறம் மண்ணார் முழவின் இசைஎழ ஒருதிறம் அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப ஒருதிறம் பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க ஒருதிறம் வாடை உளர்வயின் பூங்கொடி நுடங்க ஒருதிறம் பாடினி முரலும் பாலையங் குரலின்

நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம் ஆடுசீர் மஞ்ஞை அரிக்குரல் தோன்ற மாறுமாறு உற்றனபோல் மாறுஎதிர் கோடல் மாறு அட்டான் குன்றம் உடைத்து

- பரி. 17/9-21

இதே போன்ற கருத்தும் அணிவகையும் பரிபாடலில் மற்றோர் இடத்தில் வந்துள்ளது.

12.9.3. கலித்தொகையில் வரும் தொடரில் இத் நடுமாற்றம் மிகத் தெளிவாகப் பொருந்தி உள்ளது. முகம் மதிக்கும், மதி முகத்திற்கும் உவமிக்கப்பட்டுள்ளன.

அணிமுகம் மதி ஏய்ப்ப அம்மதியை நனிஏய்க்கும் அணிமுகம். -கலி, 64/1-2

12.10. தற்குறிப்பேற்ற உவமை

இல்லாத ஒரு பொருளைப் படைத்து அதனை உவமை யாகத் தரும் அழகு இல்பொருள் உவமையில் காணப்படுகிறது. உள்ள பொருளையே கூறித் தன் கற்பனையாற்றலைப் புகுத்தும் திறன் ஒருசில உவமைகளில் காணப்படுகிறது. இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர். இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சிக்குப் புலவன் தான் ஒரு காரணம் கற்பித்துக் கூறும் அழகு இத் தற்குறிப்பேற்ற அணியில் காணப்படுகிறது.

12.10.1. புறநானூற்றுப் பாடல் ஒன்று தற்குறிப்பேற்ற அணிநயம்பட ஒரு நிகழ்ச்சியைச் சித்திரிக்கின்றது. ஆய் அண்டிரன் என்பானை வானவர்கள் போற்றி வரவேற்றனர் என்று ஆசிரியர் கூற விரும்புகின்றார். இந்திரனின் கோயிலில் முரசம் பெருகி ஒலித்தது. அஃது ஆய் அண்டிரன் வருகின்றான் என்பதற்காக எழுப்பப்பட்ட ஒலி முரசு என்று சித்திரிக்கின்றார்.

1. பரி. 22/36-44.