பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 33

12.11.1. மின்னல் வளைவு உடையது. அது நிமிர்ந்து நில்லாது. எனினும் வேல் ஆகிய பொருள் வளைவு அற்ற ஒன்று; அதற்காக உவமையைக் கூறும் பொழுது நிமிர்ந்த மின்னலை உவமைப் படுத்திக் கூறியுள்ளனர். நிமிர்ந்த மின்னல் என்பது திரிபு உவமை எனலாம்.

மின்னு நிமிர்ந்தனைய வேல். நற்.51/6

12.11.2. வளைந்த யானையிள் கொம்பு தாழை மலருக்கு உவமைப்படுத்தும் பொழுது அது நீட்டித்த நிலையில் வைத்துக் கூறப்படுகிறது.

கோடு வார்ந்தன்ன வெண்பூத் தாழை -நற். 203/4

12.11.3. இரலை மானின் முறுக்குண்ட நீண்ட கொம்புகள் திரிந்த இரும்புக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப -அகம், 4/3-4

12.11.4. யானையின் கொம்பு நீண்ட வடிவினது. அது முட்டைக்கு உவமைப்படுத்தும் பொழுது அது திரிந்து வட்டமாக அமைந்த நிலை கூறப்படுகிறது.

கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை

-அகம், 160/6

12.11.5. காட்டு வாழும் கானவரின் உரம்பெற்ற கைகள் வடித்த இரும்புக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன். -அகம். 172/6

12.11.6. இதே உவமை மற்றோர் இடத்தில் கருமகன் கைக்கு ஒப்புமையாக வந்துள்ளது.

இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர். -பத். 4/223

12.11.7. இரும்பு திரித்தன்ன என்னும் உவமை மற்றோர் இடத்திலும் வந்துள்ளது.

இரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை.

-அகம். 56/3

1. 'மின்னு நிமிர்ந்தனையர்' -பத். 6/679