பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 35

முறை நிரல் நிறை எனவும், மாறி மயங்கி வருவனவற்றை மயக்க நிரல் நிறை எனவும் கூறுவர்.' சங்க இலக்கியத்தில் முன்னதே வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

12.13.1. பொன்னும் மணியும் முறையே மகளிரின் மேனிக்கும் கூந்தலுக்கும் உவமையாக வருதல் பயின்று வரும் செய்தியாக அமைந்துள்ளது.

பொன்னும் மணியும் போலும் யாழநின்

நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும். -நற். 16-11-2

12.13.2. மலரும் மூங்கிலும் போல மகளிர் கண்களும் தோள்களும் விளங்கின எனக் கூறப்படுகிறது.

போதும் பணையும் போலும் யாழ நின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும். நற்.166/3-4

12.13.3. நெருப்பும் காற்றும் விசும்பில் தோன்றுவதைப் போலத் துன்பமும் இன்பமும் ஒரே இடத்தில் அமைகின்றன என்று கூறப்படுகிறது.

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு

நோயும் இன்பமும் ஆகின்று மாதோ. -நற். 294/1-2

12.13.4. நிரல் நிறை உவமை மிகுதியாகவும் சொல் நயம்படவும் கலித்தொகையில் வந்துள்ளது குறிப்பிடத் தக்க தாகும்.

தலைவன் தலைவியைக் கண்ணுறுகின்றான். நில் என நிறுத்தி அவள் நெற்றியையும், முகத்தையும், தோள்களையும், கண்களையும், இயலையும், சொல்லையும் நோக்கி நினைவு படுத்திக் கீழ்வரும் உவமைகளை அமைக்கின்றான். பிறைத் திங்கள், நிறைமதி, மூங்கில், நீர்ப்பூ, மயில், கிளி ஆகிய இவற்றை மேற்குறிப்பிட்ட பொருள்களுக்கு ஒப்புமைப்படுத்து கின்றான். இவ் எடுத்துக்காட்டு முன்னர் விலக்கு உவமையாகிய எதிர்மறுப்பு உவமைக்குக் காட்டப்பட்டுள்ளது. 12.14. பல்பொருள் உவமை

ஒருபொருளுக்கு ஒர் உவமையைக் கூறுவது பொது மரபாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்களையும்

1. யாப்பருங்கலக் காரிகை. - பக். 181 2. இந்நூல் பக்கம் 28.