பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சங்க இலக்கியத்தில் உவமைகள்

உவமையாகக் கூறும் பொழுது அவை அக் கவிஞனின் வியப் புணர்ச்சியையும், உவமைகளை மிருதிப்படுத்திக் காட்டும் திறனையும் காட்டுகின்றன. இதனைப் பல்பொருள் உவமை அணி என்று கூறலாம்.

ஒரே தன்மைக்குப் பல பொருள்கள் உவமையாதல் உண்டு; ஒரு பொருளின் பல்வேறு தன்மைகளுக்குப் பல்வேறு உவமைகள் அமைதலும் உண்டு.

12.14.1. முல்லையும் முத்தும் மகளிரின் பற்களுக்கு உவமையாகத் தரப்படுகின்றன. வெண்ணிறமும் வடிவும் ஒளியும் இவற்றின் பொது இயல்புகள் எனலாம்.

முகை முல்லைவென்று எழில்முத்து ஏய்க்கும் வெண்டல் -பத் 8/76

12.14.2. கண்களின் மலர்ச்சிக்குப் பூவும், அவை செய்யும் நோய்க்கு அம்பும் உவமைகளாக அமைந்தன.

பூஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய்செய் தனவே -குறு. 72/1-2

12.14.3. அன்னமும், மயிலும், புறாவும் மகளிரின் எழில் நலத்திற்கு உவமை தரப்பட்டுள்ளன. எழில் நலம் என்பதற்குக் கலித்தொகையின் உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் விளக்கம் தரும்பொழுது அன்னத்தை நடைக்கும், புறாவினை எழிலுக்கும், மயிலினைச் சாயலுக்கும் உவமைப்படுத்தி யுள்ளனர்.

ஆய்துவி அனமென அணிமயில் பெடைஎனத்

தூதுணம் புறவுஎனத் துறைந்தநின் எழில்நலம்

-கலி, 56/15-16

12.14.4. ஒரு பொருளுக்கு ஐந்து உவமைகளும் தரப் படுகின்றன. இதுவே மிக்க எல்லையாக வந்துள்ளது. இவ் உவமை பரிபாடலில் இடம் பெற்றுள்ளது. மழை, பூவைமலர், கடல், இருள், நீலமணி ஆகிய இவ் ஐந்து பொருள்கள் திருமாலின் கரிய மேனியின் நிறத்திற்கு உவமையாக வந்துள்ளன.

கார்மலர் பூவை கடல் இருள்மணி அவைஐந்தும் உறழும் அணிகிளர் மேனியை. - -பரி. 13/42-43