பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 37

12.14.5. கலித்தொகையில் ஒரு பொருளுக்கு மூன்று உவமைகள் அடுக்கி வருதல் மரபாகி விட்டது கலிப்பாவில் ஒரு பொருள் மேல் மூன்று தாழிசைகள் அடுக்கி வருதல் பாவியலின் அமைப்பாக இருத்தலின் அதனை ஒட்டி உவமைகளும் மூன்றாக அமைகின்றன எனக் கூறலாம்.

இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் சான்றைக் காட்டலாம். தலைவனுடன் உடன் சென்ற தன் மகளைத்தேடும் செவிலித்தாய் வழியில் அந்தணர் வருவாரை அவர்களைப் பற்றி விசாரிக்கின்றாள். அதற்கு அவர்கள் தரும் அறிவுரையில் மூன்று செய்திகள் கூறுகின்றனர். அம்மூன்றும் உவமைகளாக அமைந் துள்ளன.

'நறுமணம் தரும் சந்தனம் மலையில் தோன்றினாலும் அம்மலைக்கு அச்சந்தனம் மணம் உண்டாக்குவதில்லை; அதைப் பூசிக் கொள்பவர்களுக்கு அது மணத்தைத் தருகின்றது'. 'கடலில் தோன்றும் முத்து அக்கடலுக்கு அழகு தருவது இல்லை. அதனை அணிபவர்க்கே பயன்படுகிறது.'

"யாழில் தோன்றும் இசை அவ் யாழிற்கு இன்பம் உண்டாக்குவதில்லை. அதனை உண்டாக்கும் இசைக் கலை ஞனுக்கே இன்பம் தருகிறது.'

இவ்வாறே அவள் மகள் பிறந்த இடத்திற்குப் பயன்படாள். கொண்ட கொழுநனுக்கே துணையாவாள் என்ற செய்தியைக் கூறுகின்றனர்.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம்

என் செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே சீர்கெழு வெண்முத்தம் அண்பவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் தேருங்கால் தும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லது யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும் சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

-கலி, 9/12-20 12.14.6. இவ்வாறு ஒரு செய்திக்கே மூன்று உவமைகள் அமைப்பதோடு ஒரே செய்தியை மூன்று முறை கூறுதலும் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது.