பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 41

நின் அடி உள்ளி வந்தனன் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் -பத். 1/279-280

புறத்திணை இலக்கியங்களில் சங்க காலப் புலவர்கள் அரசர் களைப் பாராட்டுமிடத்து இவ் உத்தியைக் கையாளுகின்றனர்.

பிறர்க்கு நீவாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா ஒரு பெரு தேந்தே. -பதிற. 73/2-3

புறநானூற்றில் இதே போன்ற கருத்தமைந்த பாடலில் அரசன் சிறப்பிக்கப்படுகின்றான்.

பிறர்க்கு உவமம் தானல்லது தனக்குவமம் அல்ல பிறர்சிலர். -புறம். 377/10-11

12.17.1. பொருள் உவமை அல்லது விபரீத உவமை

உவமையும் பொருளும் இடம் மாற்றுவதால் ஒரு புதுமையை உண்டாக்க முடிகிறது. மொழித் தொடரில் எழுவாய் பயனிலைகளை இடம் மாற்றுவதால் ஒரு புதுமையை உண்டாக்கி நடையழகினைக் காண முடிகின்றது. அம்மாற்றம் ஒரு சில இடங்களில் வருவதால் நடையில் மாற்றமும் புதுமையும் விளைவித்துத் தனி நடையைத் தோற்றுவிக்க இயல்கிறது. அதேபோல உவமை அணியில் இப் புதுமையை உண்டாக்கி அணியழகைத் தோற்றுவிக்க இயல்கிறது. இதனை வடநூலார் விபரீத அணி என்று பாராட்டுவர். அதற்கு நிகராகத் தமிழில் பொருள் உவமை அணி எனப் பெயர் கொடுக்கலாம். இவ்வாறு கொள்வதற்குத் தொல்காப்பியம் இடம் தருகின்றது.

பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃது உவமமாகும்.

-தொல்.சூ 284

என்ற பாவியலில் பொருள் உவமையினைக் கூறுகின்றார். இச் சூத்திரத்தால் பொருளையே உவமையாகக் கொள்ளப்படும் உருவகத்தை உணர்த்தினர் என்றும் கூறுவர்." இவ்விபரீத உவமையை இச் சூத்திரத்தால் உணர்த்தினார் என்று கொள்ள வும் கிடக்கிறது.

1. தொல் பேராசிரியர் உரை. 2. தொல், இளம்பூரணர் உரை.