பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 43

மலர்கிறது என்று கூறுவது சிறப்பு நியதி எனலாம். இதே போலக் காந்தள் மலருக்கு மகளிர் கரங்கள் உவமையாகின்றன.

'பொது நியதி: 'நெய்தல் உண்கண்' - அகம். 10/5

'மாற்று நியதி: 'கண்போல் நெய்தல்' - ஐங். 113

'கண்ணன்ன மலர் பூக்குந்து' - புறம். 396/2

"கைபோல் காந்தள்' - நற். 355/2

12.17.5. இவ் விடமாற்ற அழகினை மிக அழகாக ஐங்குறு நூறு பயன்படுத்தித் தான் உணர்த்த வந்த கருத்தை உணரும் படியும் அழகுபடவும் ஆற்றலோடும் உணர்த்துகிறது. தலைவியின் வடிவம் மயிலுக்கும். அவள் கூந்தலில் எழும் மணம் முல்லை நறுமணத்துக்கும். அவள் மருண்டவிழிகள் மானின் நோக்கிற்கும் தொகுத்து உவமை செய்யப்படுகின்றன. மயிலும், முல்லைமலரும், மான்விழியும் தலைவனின் நெஞ்சில் பல நினைவுகளை எழுப்புகின்றன. அவள் அழகிய வடிவம் அவன் கண்முன் வந்து நின்று காதல் நினைவாகக் கிளம்பி, அவனை வேதனையுறச் செய்கிறது. அதனால் இல்லம் நோக்கி அவன் திரும்பி வருவதாகக் கூறுகிறான். சங்கப் புலவர்கள் அமைத்துக் கொடுத்த இப்புதிய அணி மரபினை இவ் ஐங்குறு நூற்றுப்பாடல் அழகாகப் பயன்படுத்திக் கொண்டது.

நின்னே போலும் மஞ்ஞை யால நின் நன்னுதல் நாறு முல்லை மலர நின்னே போலு மாமருண்டு நோக்க நின்னே உள்ளி வந்தனென் நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே -ஐங். 492/1-5

12.17.6. இப்பொருள் உவமைகள் மகளிர் வரு ணனைக்கே மிகுதியாக வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மகளிர் பொதுவாகக் கொடிக்கும் அவர்கள் சாயல் மயிலுக்கும், மேனி தளிருக்கும், கூந்தல் மயில்தோகை, மேகம், அறல் முதலியவற்றிற்கும், நுதல் பிறை, பீர், முல்லை மணம், புறவு நாற்றம் முதலியவற்றிற்கும், கண்கள் பல்வகை மலர்கள், கயல் ஆகிய இவற்றிற்கும், முகம் மலர்கள், மதி ஆகியவற்றிற்கும், பல்முல்லை, முகை, முத்து ஆகிய