பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சங்க இலக்கியத்தில் உவமைகள்

வற்றிற்கும், கொங்கை தாமரை, வாழை, நுங்கு முதலிய வற்றிற்கும், கை காந்தள், ஞாழல் முதலியவற்றிக்கும். உகிர முருக்கிதழுக்கும், மகளிர் நாணம் ஏனல் கதிர் வளைவுக்கும் உவமைகளாக வந்துள்ளன.

12.18. மாலை உவமை

இது முற்கூறப்பட்ட அந்தாதி உவமைளோடு நெருங்கிய தொடர்பு உள்ளது. கொண்டுவந்த கருத்துகளும் சொற்களும் மீண்டும் மீண்டும் வருதல் இவ்விரண்டு அணிகளுக்கும் உள்ள ஒற்றுமை நயமாகும். மாலையணி கைப் பொருத்தவரையில் இதற்கு மற்றோர் தனிச்சிறப்பு உள்ளது. ஈண்டு கருத்தும் சொற்களும் தொடர்தல் என்பது உவமைப் பகுதிகளோடு மட்டும் பொருந்துவதாகும். உறவும் தொடர்பும் உள்ள பொருள்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு ஒரு மாலை போல் இணைக்கப்படுகின்றது.

12.18.1. பரிபாடலில் மாலை உவமை அணி அமைய ஒர் அழகிய தொடர் வந்துள்ளது. திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரைப் பூவினைப் போன்றது சீறுர். அப் பூவின் இதழ் அனையன தெருக்கள்; இதழ் கத்து அரிய முகையைப் போன்றது அரசன் கோயில்; அப் பொகுட்டில் உள்ள தாதுகளைப் போன்றது தண் தமிழ்க் குடிமக்கள்; அத்தாதினை உண்ணவரும் பறவை யனையவர் பரிசிலர் என்று கூறப் படுகின்றன. இதில் உவமைச் செய்திகள் மட்டும் அந்தாதித் தொடையாக ஒன்றனோடு ஒன்று தொடர்பு பெற்று மாலைபோல் காட்சி அளிக்கிறது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீறுர் பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில், தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்: தாதுண் பறவையனையர் பரிசில் வினைஞர்

- பரி. இணை. 7/1-6

12.18.2. மதிபோன்றது முகம் எனவும், அரவு சேர்

மதிபோல அம்முகம் பசப்பு நிறம் பெற்றது எனவும்,

உவமைகளை அந்தாதித் தொடையாக அமைத்து மாலையணி அமையக் கலித்தொகை செய்திகளைத் தந்துள்ளது.