பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சங்க இலக்கியத்தில் உவமைகள்

களுள்ளும் இவ் வழகினைத் தோற்றுவிப்பதில் ஓர் சிறப்பினைக் காண்பர். இதனை முரண் உவமை என்று கூறலாம்.

12.9.1. ஒரு தலைவனின் இனிய பேச்சு அன்பு நிறைந்ததாக இருந்தது எனவும், அவன் பிரிவுச் சொறகள் கொடுமை விளைவித்தன எனவும், ஒர் தலைவி கூறுகின்றாள். அவ்வினிமைக்குத் தாயையும், கொடுமைக்குக் கள்வரையும் இணைத்து உவமைப்படுத்துகின்றாள். இக்கூற்றில் பொருளி லும் உவமையிலும் முரண்தொடை அமைந்துள்ளது எனலாம்.

அன்னை போல இனிய கூறியும் கள்வர் போலக் கொடியன் மாதோ - நற். 28/3-4

12.19.2. இத்தகைய முரண்தொடை உவமைகள் சங்க இலக்கியத்தில் பல்கிப் பரவியுள்ளன. அது ஒரு தனியழைகைத் தருகின்றது. நிறங்கள் இவற்றில் மோதி வண்ண அழகைத் தருகின்றது. மாறுபட்ட உலோகங்கள் முரண் உவமைகளாக அமைகின்றது. புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் பசிய இலைகள் நீலத்திற்கும், அவ் இலைகளின் நடுப் பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுந் தாதுக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன. இவ் உவமைகளில் இரும்பு, நீலம் வெள்ளி, பொன் எனப் பல உலோகங்கள் முரண் நயம் தோன்ற உவமைகளாக அமைந்துள்ளன.

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும்

வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந்தாது உதிர. - நற் 249/1-4

12.19.3. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பொருள்களையும் இவ்வாறே அமைத்து முரண் அழகு காண் கின்றனர். விசும்பில் தீயும் பிறக்கின்றது காற்றும் உண்டாகிறது. அதே போலத் தலைவன் இன்பமும் துன்பமும் உண்டாக்கு வதற்குக் காரணம் ஆகின்றான் என்று கூறப்படுகிறது.

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு

நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ. - நற். 294/1-2

12.19.4. பெரும்பாலும் இணைப்புத் துணை உவமை களில் காட்டப்படுவன முரண் நயம் மிக்கவையாகவே உள்ளன