பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உவமை வகைகள் 47

எனக் கூறலாம். பசுமையான செடிகளில் ஒளி பொருந்திய மலர்கள் உதிர்தல் முரண்பட்ட உவமைகளால் காட்டப்

படுகிறது.

நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும் வெள்ளி யன்ன ஒள்வி உதிர்ந்து. -பத் 6/279-280

இப்பகுதியில் நீலமும் வெள்ளியும் இணைப்பு உவமைகள் ஆதலே யன்றி முரண் உவமைகளும் ஆகின்றன. இவ் வாறே திங்களும் ஞாயிறும் உவமைகளாக முரண் நயம் அமையப் பல இடங்களில் வந்துள்ளன.

12.20. முற்று உவமை

ஒரு பொருளை வருணிக்குமிடத்து அதன் முழு வடிவத்தைத் தரும் பொழுது அதன் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனி உவமைகளைப் பொருத்திக் கூறி ஒரு முழு வடிவத்தைத் தீட்டித் தருகின்றனர். இவ்வாறு அமைக்கும் முழுமைபெற்ற உவமையணியை முற்று உவமை அணி

{Tossol?ss Lo.

பொதுவாக மகளிரை வருணிக்கும் இடத்துச் சங்க இலக்கியத்தில் முழு வருணனையைத் தருவதில்லை. முகத்தையோ கூந்தலையோ தோளினையோ முறுவல். விழி முதலியவற்றையோ கூறிக் கோடிட்டுக் காட்டுவது போல வரையும் சொற் சித்திரங்களே சங்க இலக்கிய வருணனை அழகாம். எனினும் ஒரு சில இடங்களில் மகளிர் முழுவடிவமும் தீட்டப்படுகின்றன. மகளிரைப் போலவே இயற்கைக் காட்சி களுக்குத் துணையாக விளங்கும் மரம் செடிகளையும், பாணன் பாடினியர் கையகத்து உள்ளயாழ் வகைகளையும், மக்கள் வாழும் இல்லங்களையும், தோகை விரித்தாடும் மயிலினத்தை யும், போர்க்களக் காட்சிகளையும் முழு வருணனையாக த்து அதற்குத் துணையாக முற்றுவமைகளைத் தந்துள் (60 يولي

ófᎢ❍ᎢfᎢ

12.20.1 பிற்கால இலக்கியங்களில் மகளிரையும் தெய்வங்களையும் அரசர்களையும் முடி தொடங்கி அடிவரை யிலும், அடி தொடங்கி முடி வரையிலம் வருணிக்கும் ஒர்

1. பிற்குறிப்பு 6ல் காண்க 2. பிற்குறிப்பு 7-ல் காண்க