பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

சங்க இலக்கியத்தில் உவமைகள் என்பது எடுத்துக் கொண்ட தலைப்பாகும். இதுவே முதன் முறை இத்தலைப்பில் வெளிவரும் ஆய்வு நூலாகும். தொல்காப்பியத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க அணிநூல் தண்டியலங்காரமாகும். இது பொது வகையான் அமைந்த இலக்கண நூலேயன்றி எந்தத் தனிப்பட்ட இலக்கியத்தின் மரபுகளையும் சுட்டிக்காட்ட அமையவில்லை. சங்க இலக்கியம் பொருள் நிலையிலும், சொல் வகையிலும், யாப்பு அமைதியிலும் தனி மரபுகளைப் பெற்று விளங்குகின்றது. அதே போல உவம அணி வகையிலும் தனி மரபுகளைத் தாங்கியுள்ளது. அவற்றைச் சுட்டிக் காட்டுவதே இவ்வாய்வின் அடிப்படையாகும்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன ஒரு குறிப்பிட்ட மரபினைப் பெற்று விளங்கும் நூல்களாகும். இவற்றையே சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர். இவை ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்தன என்று கருதப்படுகிறது. தொல்காப்பியத்திற்குப் பின்னும் சிலம்பு மேகலைக்கு முன்னும் எழுந்தவை இவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. கி.பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை என்ற கருத்தே பொதுவாக விளங்குகிறது. இந்நூல்களின் மரபுகளே ஈண்டு ஆராயப்படுகின்றன.

இவ்வாய்வு ஏழு தலைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. (1) உவமை வகைகள் (2) உருபுகள் (3) உருவகம் (4) சொல்லியல் மரபுகள் (5) நயச்சிறப்புகள் (6) பொருளியல் மரபுகள் (7) உள்ளுறையும் இறைச்சியும் ஆகிய இத் தலைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இதில் ஆய்வுச் செய்திகளுக்குச் சான்றுகளாக ஆங்காங்கு எடுத்துக்காட்டுகளும் வருமிடங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அடிக் குறிப்புகளும் பிற்குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. அடிக் குறிப்புகள் வரும் இடங்கள் முழுமையும் தரப்பட்டுள்ளன. மிகை என்று படும் இடங்களில் மட்டும் ஒரு சிலவே தரப்பட்டுள்ளன. இக்குறிப்பு ஆங்காங்கே சுட்டப் பட்டுள்ளது. உள்ளுறை இறைச்சி வரும் இடங்கள், உவம-