பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சங்க இலக்கியத்தில் உவமைகள்

ஒழுங்கு முறையைப் பின்பற்றி வந்தனர். இதனை முறையே 'கேசாதிபாத வருணனை' என்றும் பாதாதி கேசவருணனை' என்றும் சுட்டிக் காட்டுவர். இதற்கு முன் மாதிரியாகப் பத்துப் பாட்டு என்னும் நூலில் பொருநராற்றுப்படையும் பட்டினப் பாலையும் அமைந்துள்ளன. முடிதொடங்கி அடிவரை' பொருநர் ஆற்றுப்படையிலும் அடிதொடங்கி முடிவரை' பட்டினப் பாலையிலும் காணப்படுகின்றன. அறல் போல் கூந்தல்' எனத் தொடங்கி வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி' எனப் பொருநர் ஆற்றுப்படை முடிகின்றது.'

சேவடி செறிகுறங்கின்

பாசிழை பகட்டு அல்குல்

தூசுடைத் துகிர்மேனி

மயிலியல் மான்நோக்கின்

கிளிமழலை மென்சாயலோர் - பத். 9/146-150

எனக் காலடி தொடங்கித் தலைமுடி வரை கொண்டு செல்லும் அழகைக் காணமுடிகிறது. இவற்றுள் பொருநர் ஆற்றுப்படைப் பாடல் வருணனை ஒவ்வோர் உறுப்புக்கும் தனி உவமையைத் தந்து முற்றுவமைக்குச் சான்றாக முழுமை பெற்று விளங்கு கிறது.

12.21. வேற்றுமை அணி

பொருளுக்கும் உவமைக்கும் வேறுபாடு காட்டி இவையிரண்டும் ஒவ்வா எனக்கூறிப் பொருளைச் சிறப்பித்தல் வேற்றுமை அணி எனக் கொள்ளல் தகும். இந்நிகழ்ச்சிகளில் எல்லாம் உவமையைவிடப் பொருளே சிறந்தது என்னும் நயம் தோற்றுவித்தல் இதன் தனிச்சிறப்பாகும்.

12.2.1.1. புறத்தில் வேற்றுமையணிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு அமைந்துள்ளது. சேரமன்னன் கதிரவனுக்கு உவமைப் படுத்தபடுகிறான். இவ் உவமையில் கதிரவன் சேரனோடு மாறுபடும் சிறப்புகளைச் சுட்டிக்காட்டி வேறுபாடு அமைக்கப் படுகிறது. கதிரவன் காவலனின் முன்னால் எதிர் நிற்க முடியாது என்பதனைக் கூறி ஒரு புதிரை அமைக்கின்றார். கீழ்வரும் வேறுபாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. கதிரவன் குறிப் பிட்ட காலங்களில் வெளிப்படுகின்றான். அவன் இடம்விட்டு

1. பத். 225.42