பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உவமை வகைகள் 49

இடம் ஒடுகின்றான். தன் நிலை மாறுகின்றான் மலையில் மறைந்த ஒளிகின்றான். பகலில் மட்டும் அகல் ஞாலத்துக்கு ஒளி தருகின்றான். அரசனோ எனின் வீரமும் ஒடுங்கா உள்ளமும், ஒம்பா ஈகையும் கொண்டு விளங்குகின்றான். அவனுக்குக் குறிப்பிட்ட நேரம் காலம் என்கின்ற வரையறை இல்லை; எந்தக் காலத்திலும் இரவலர்க்கு அருள் செய்வான். மற்றவரிடத்தி லிருந்து அவன் தன்னை மறைத்துக்கொள்வதில்லை. தனக்கு என எதையும் ஒதுக்கி வைத்துக் கொள்வதில்லை. இவ்வோறு பாடுகளைச் சுட்டிக்காட்டி அதனால் கதிரவன் சேர மன்னனுக்கு நிகராகான் என்பதைக் குறிப்பாகக் காட்டுகின்றார். இக்கருத்து அமைந்த பாடல் பின்வருமாறு.

ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதனை யாங்ங்னம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி அகலிரு விசும்பினானும் பகல் விளங்குதியால் பல்கதிர் விரித்தே. - புறம் .8/4-U1

இப்பாடலைத் தொல்காப்பிய உவமை இயலில் வேறுபட வந்த உவமைத் தோற்றம்' என்ற சூத்திரத்துக்கு உரை யாசிரியாராகிய பேராசிரியர் எடுத்துக்காட்டாகக் காட்டுவர். இவ்வணியைப் பிற்காலத்தார் வேற்றுமை யணி என்று தனிப் பெயர் கொடுத்துச் சிறப்பிப்பர். இவ்வணி மற்றும் பல இடங்களில் வந்துள்ளது.'

12.2.1.2. முரண் உவமைகள் ஒரு சிலவற்றுள் வேற்றுமை அணியும் குறிப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். கரிய மெய்யின் நிறத்தோடு திருமாலின் ஆடை மாறுபட்டிருக்கிறது என்னும் கூற்றில் முரண் நயமும் வேற்றுமை நயமும், அமைந்துள்ளன.

மாமெய் யோடு முரணிய உடுக்கை. -பரி. 4/8

12.21.3. மற்றும் பொன்னோடும் மாறுபடும் மணியை இணைத்து முரணும் வேற்றுமை தோன்ற அமைத்துள்ள பகுதி சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் அமைந்துள்ளது.

1. பிற்குறிப்பு 8ல் காண்க