பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவம உருபுகள் 55

5. 'மலர் ஏர் கண்' (நற்.120/7). மலர் போன்ற கண் என்புது இத் தொடரின் பொருளாகும். ஏர் என்பதற்கு அழகு என்னும் பொருள் உள்ளது. அழகு என்னும் பொருள் தரும் ஏர் என்பதனைப் பெயர்ச்சொல் என்று கூறலாம். எனவே ஈண்டுப் பெயர் வடிவில் விளங்கும் முழுச் சொல் உவம உருபாக வந்துள்ளது.

6. இவ்வாறு பெயரும் வினையும் ஏனைய இடைச் சொற்களும் உவம உருபுகளாக வந்துள்ளமை சங்க உவமை களின் உருபு நிலைகளாம். எனவே உவம உருபுகள் என்பவை முழுச் சொற்களும் இடைச் சொற்களும் எனக் கொள்ளக் கிடக்கின்றன.

7. தொல்காப்பிய உவம இயலின் உரையாசிரியரான பேராசிரியர் வினையும் இடைச் சொல்லும் உருபாக வரு தலையும், உருபு இல்லாமல் தொக்கு வருதலையும் மட்டும் குறிப்பிடுவர். பெயர்ச் சொற்களும் உருபு ஆதலை அவர் காட்டாமல் விடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கதாம் 'அவை இடைச் சொல்லாகத் தொக்கு வருவனவும் தொகாதே நிற்பனவும் வினைச் சொல்லாகி வேறுபட நிற்பனவும் எனப்பலவாம் என்றாவாறு' என்பர் பேராசிரியர்.

8. உவம உருபுகள் பெயர் வினை இடைச் சொற்கள் ஆகிய அனைத்துமாக வருகின்றன; உருவகத்திற்கும் இவ்வாறே பல்வகை வடிவங்கள் உருபுகளாக வருகின்றன. ஆக, ஆகிய, என்னும், எனப்படும் என்பவை உருவக உருபுகளாக வந்துள்ளன.

9. அவ் உருபுகளே அன்றி வெளிப்படை விளக்கங்களும் நேரிடையாக அமைந்து உவமையையும் பொருளையும் தொடர்பு படுத்துகின்றன. உவமையின் வடிவு, பண்பு, நிறம் முதலியவற்றை இக் கூற்றுகள் தாங்கியுள்ளன. இக்கூற்றுகள் வெளிப்படையாகக் கிளக்கும் உவமங்களாகும். இவற்றில் இக் கூற்றுகளே நின்று உவம உருபுகளின் செயலை மேற் கொள்கின்றன எனலாம்.

9.1. கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை (அகம். 160/6). இத் தொடரில் உருவின்' என்ற விளக்கச் சொல்லே உவமையாக அமைந்துள்ளது.

1. தொல்.கு. 286.பேராசிரியர் உரை.