பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவம உருபுகள் 57

1.1.2. பொருள் மற்றொரு உவமையோடு ஒப்பிட்டு அதனை விட உயர்ந்தது என்னும் உறழ்வுக் கூற்றை இரண்டாவது வகை எனலாம். இவற்றை உறழ்வு நிலைக் கூற்று எனக் கூறலாம். 'இன்' இனும் என்பவை உறழ்வு உவம உருபுகள் எனலாம்.

11.3. பொருள் உவமையோடு முரண்கொள்ளுதலாகக் கூறலும் ஒரு தனிவகை எனக் கூறலாம். 'மருள் உறழ்' முதலியவை முரண்பாட்டைத் தெரிவிப்பன எனலாம்.

11.4. உவமையோடு மாறுபட்டுப் பொருள் வெல்லு வதாகக் கூறுலும் ஒரு தனி வகை உவமம் எனக் கூறக் கிடக்கிறது. வென்ற, பொருத, ஏசும், ஏய்ப்ப, கடுப்ப முதலியன வெல்லுதல் நிலையில் அமைந்த உவம உருபுகள் எனலாம்.

11.5. இன்னும் பல்வகைப் பொருள்களில் அமைந்த உவம உருபுகள் பல உள்ளன. என, என்னும், ஏர், செத்து, சால, மயங்கு அமர், அவிர், ஆங்கு ஆகியர் முதலியன இப் பகுப்பில் அடக்கலாம். எனவே பல்வகைப் பொருள்களையும் கருத்து களையும் உணர்த்தி வந்த பல்வேறு சொற்கள் உவமையையும் பொருளையும் இணைத்து நின்றன என்றும், முதலில் அவை உவமைக்கும் பொருளுக்கும் உள்ள உறவை மட்டும் விளக்கி நின்றன என்றும், அவை நாளடைவில் பழைய பொருளை இழந்து வெறும் உருபுகளாக நின்றுவிட்டன என்றும் கொள்ளக் கிடக்கின்றன.

11.6. மேற்கூறப்பட்ட உருபுகள் யாவும் சொல்நிலை அமைப்பிற்கும், தொடர்நிலை அமைப்பிற்கும் ஏற்ப, வினை, பெயராக நிற்பதோடு பலவகை எச்ச வாய்பாடுகளையும் பெறுகின்றன. அவற்றின் அமைப்பும் வடிவும் தொடர் நிலைக்கு ஏற்ப மாறுகின்றன. ஒரே உவம உருபு பல்வேறு வடிவங்களில் திகழ்வதற்கு இதுவே காரணமாகின்றது. 'போல்' என்ற அடிச் சொல்லிலிருந்து போலும் போல, போன்ற, போன்றது எனப் பல்வேறு வடிவங்கள் அமைந்துள்ளன. ஒரே உவம உருபு தொடர்நிலையின் சூழ்நிலையால் பல்வகை வடிவங்கள் பெறுகின்றன.

11.7. இவ் உவம உருபுகள் பெரும்பாலும் வினை வடிவங்களாகவே இயங்குகின்றன. இவ் வடிவங்களைத் தொல்காப்பியர் காட்டும் இலக்கண நெறியின் வழியிலே நின்று