பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சங்க இலக்கியத்தில் உவமைகள்

கீழ்வருமாறு அமைத்துக் காட்டலாம். அவற்றைச் செய். செய, செய்யும் செய்த, செய்பு முதலிய வாய்பாடுகளில் பொருத்திக் காட்டலாம். ஒரே உவம உருபு எல்லா வினைவாய் பாடுகளிலும் வருவது இல்லை. செத்து என்னும் உவம உருபு செய்து என்னும் வடிவினது என்று கூறலாம். இதன் ஏனைய வினையெச்ச வடிவங்கள் உவம உருபுகளாக அமையவில்லை எனக் கூறலாம். இதன் முழு வினைமுற்று வடிவம் அக நானுற்றில் மட்டும் ஒரே ஒர் இடத்தில் வருகின்றது. 'செத்தனள்' (அகம். 16/8) என்ற வடிவம் முற்று எச்சமாக வருகிறது 'செத்து' என்பதற்கு இதைத் தவிர வேறு எந்த வடிவமும் எங்கும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். மான என்பதற்கு 'மான மானும் (செய, செய்யும்) வடிவங்கள் மட்டும் வந்துள்ளன.

11.8. இத்தகைய மாறுபாடுகளும் வேறுபட்ட வடிவங் களும் கீழ்வரும் வாய்பாடுகளில் அடக்கிக் காட்டலாம். செய், செய, செய்து செய்பு, செய்யும், செய்த என்னும் வாய்பாடு களின் கீழ் அவற்றைக் காட்ட முடியும். செய்யும் என்பது பெயருக்கு முன்னால் வரும்பொழுது பெயரெச்சமாகவும், பயனிலையாக அமையும் பொழுது வினைமுற்றாகவும் வரும் இயல்பினது. இவ்வாய்பாட்டில் வரும் உவம உருபும் இவ்விரு நிலைகளில் வருகின்றன என்பதைக் காணமுடிகிறது. கடுக்கும் போலும் என்னும் அமைப்புள்ள உவம உருபுகளும் இவ்வாறு எச்சமாகவும் முற்றாகவும் செயல்படுகின்றன. பெயர் வடி வங்கள், குறிப்பு வினைகள், பால் ஈறுகள் பெற்ற வினை வடிவங்கள் தவிர்த்து ஏனைய எல்லா வினை வடிவங்களையும் இவ்வாய்பாடுகளில் அமைத்துக் காட்ட முடியும்.

11.9. செய் என்பதை அடிப்படை வடிவமாகக் கொள்ளலாம். அதனை அடிச்சொல் அல்லது பகுதி எனக் கொள்ளலாம். அது ஏவல் முன்னிலை வினையின் இயல்பைப் பெற்றுள்ளது. செய என்பது செய் என்பதன் கூட்டு அமைப் பாகும். சில சமயங்களில் அஃது ஏனைய காலங்களையும் உணர்த்த வருகின்றது. செய்து என்பது இறந்த காலம் உணர்த்தும் வினையெச்சமாகும். செய்பு என்பது செய்து என்பதன் மாற்றுவடிவமாக இயங்குகிறது. செய்யும் என்பது இறப்பு அல்லாத ஏனைய காலங்களை மட்டும் உணர்த்தும். செய்த என்பது இறந்த காலத்தை உணர்த்தும் வடிவமாகும்.