பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவம உருபுகள் 61

11.15. தொகை வடிவங்கள்

சில கூட்டுருபுகளும் உவம உருபுகளாக வந்துள்ளன. இன்மான, எனக்கடுக்கும், ஏர்அன்ன, நேர் ஒப்பின் இன்மானும் முதலியன கூட்டுருபுகளாம்.

11.16. ஆங்கு என்பது எப்பொழுதும் ஒரு வினை வடிவத்தோடேயே இயைந்து வரும். அது தனித்து வருவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கலுழ்ந்தாங்கு கலங்கினேன் -புறம். 200|4.5 தைவந்தாங்கு விருந்தே காமம் -குறு. 204/1.3

தெய்வம்கட் கண்டாங்கு அலமரல் வருத்தம் தீர

-நற், 9/2.3

கலுழ்ந்து, வந்து, கண்டு முதலியன செய்து என்னும் வாய்பாட்டு எச்ச வடிவங்களாகவே இருத்தலும் குறிப்பிடத் தக்கதாகும். வேறு எத்தகைய வடிவங்களோடும் ஆங்கு என்பது சேர்வதே இல்லை. இக் கூட்டுத்தொடரை அடுத்து வாக்கியத்தின் பயனிலை எப்பொழுதும் அமையும். தமிழைப் பொருத்தவரை பயனிலை என்பது பெயராகவும் இருக்கலாம் வினையாகவும் இருக்கலாம்.

கலுழ்ந்தாங்கு கலங்கினேன் - புறம். 220/4-5

கலங்கினேன் வினைப்பயனிலை

தைவந்தாங்கு விருந்தே காமம் -குறு. 204/4-5

விருந்து என்னும் பெயர்ச்சொல் இத்தொடரின் பயனிலை யாகும். ஆங்கு என்பது வினைப்பயனிலையும் பெயர்ப்பய னிலையும் கொண்டு இக் கூட்டுத் தொடர்களாக வந்துள்ளது.

11.17. ஒவ் என்பதன் மாற்று வடிவங்கள்

ஒவ் என்னும் அடிச்சொல்லோடு ஆக்க விகுதிகளும் தகர

இடைநிலையும் சேர்ந்து ஒப்ப, ஒக்க, ஒத்த முதலிய வடிவங் களும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ஒவ்வாதி -கலி, 86/22

என்பதில் ஒவ்' என்னும் அடிச்சொல் தெளிவாகக் காலாப் படுகிறது.