பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவம உருபுகள் 63

13.1. தொல்காப்பியர் கூறும் உவம உருப்புகளில் ஒரு சில சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.

13.2. தொல்காப்பியர் உவம உருபுகளை வினை, பயன், மெய், உரு என நான்கு வகைப்படுத்திக் காட்டுவதோடு இன்ன இன்ன உவம உருபுகள் இந்த இந்த வகையைச் சாரும் என்று அறுதியிட்டுக் கூறுவர். அத்தகைய வரையறை சங்க காலத்தில் இல்லை என்பது தெரிகிறது. அவை நெகிழ்விக்கப் பெற்று மாறியும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

13.3. தொல்காப்பியர் கீழ்வரும் உவம உருபுகளைத் தருகின்றார். சூத்திரம் 286-இல் 36 உவம உருபுகளும், 287-இல் ஒன்றும் 291-இல் ஒன்றும் ஆக 38 உருபுகளைத் தருகின்றார். அவற்றை செய' என்னும் வாய்ப்பாட்டில் கூறுவது குறிப்பிடத் தக்க செய்தியாகும். அகர ஈற்று வாய்பாட்டில் எல்லா உருபுகளையும் கூறுகின்றார். அவை அனைத்தும் அகா ஈற்று வாய்பாட்டில் வழங்கி இருக்க முடியும் என்று கூறுவதற்கு இல்லை. ஓர் ஒழுங்கு நியதி முறையைப் பின்பற்றி அவ் வாய்ப்பாடுகளை அகர ஈற்றில் வைக்கின்றார். அவற்றைக் கொண்டு அவற்றின் தொடர்பு பெற்ற ஏனைய அமைப்பு களையும் உள்ளடக்கிக் கூறுகின்றார் எனக் கொள்ளுதலே ஏற்படைத்து ஆகும். போல என்று அவர் கூறினாலும் அதன் மாற்று வடிவங்களாகிய போல், போன்ற, போலும் முதலிய அனைத்தையும் அவர் உள்ளடக்கிக் கூறுகின்றார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. நேர, ஆங்க என்ற வாய்பாடுகள் வழங்கியிருக்க வேண்டும். அவர் காட்டும் வாய்பாட்டைப் பின்பற்றி அவர் தரும் உருபுகள் வருமாறு. அவை ஈண்டு அகர வரிசையில் தரப்படுகின்றன.

1. அன்ன, 2. ஆங்க, 3. இறப்ப, 4. உறழ, 5. என்ன, 6. எள்ள, 7. ஏய்ப்ப, 8. ஒன்ற, 9. ஒடுங்க, 10. ஒப்ப, 11. واستاوه 12. ஒட, 13. கடுப்ப, 14. கள்ள, 15. காய்ப்ப, 16. தகைய, 17. நடுங்க, 18. நந்த, 19. நளிய, 20. நாட, 21 நிகர்ப்ப, 22. நேர, 23. நோக்க, 24. புல்ல, 25. புரைய, 26. பொருவ, 27. பொற்ப, 28. போல, 29. மதிப்ப, 30. மருள, 31. மறுப்ப, 32. மான, 33. மாற்ற, 34. வியப்ப, 35. விளைய, 36. வீழ, 37. வெல்ல, 38. வென்ற

13.4. வெல்ல என்பதன் திரிந்த வடிவமாகிய வென்ற என்பதையும் தருவது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டும் அகர