பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சங்க இலக்கியத்தில் உவமைகள்

ஈற்றுச் சொற்கள் ஆதலின் ஒரே பொருளில் வழங்கும் இரண்டு வடிவங்களைத் தருகின்றார் எனக் கொள்ளலாம்.

13.5. இவற்றுள் சூத்திரம் 257-இல் நோக்க என்பதும் சூத்திரம் 291-இல் நேர என்பதும் கூறப்படுகின்றன. ஏனைய முப்பத்தாறு உருபுகளும் 286-ஆம் சூத்திரத்தில் தொகைப் படுத்திக் கூறுகின்றார். இவற்றையே அடுத்து ஒரு சில சூத்திரங்களில் அவற்றை வினை, பயன், மெய், உரு ஆகிய வற்றிற்கு வரையறைப்படுத்திக் காட்டுவர்.

14. மேற் கூறப்பட்ட தொல்காப்பிய உவம உருபு களோடு சங்க இலக்கியத்தில் வழங்கும் உருபுகளை ஒப்பிட்டு ஆராய்வதால் இவற்றுள் ஒருசில சங்க காலத்தில் வழக்கு இழந்துவிட்டன என்பது அறியவருகிறது. அவை பின் வருமாறு.

1. இறப்ப, 2. ஒன்ற, 3. ஒடுங்க, 4. ஒட, 5. ஒட்ட, 6. கள்ள, 7. நடுங்க, 8. நந்த, 9. நளிய, 10. நாட, 11. புல்ல, 12. மதிப்பு, 13. மறுப்ப, 14. வியப்ப

14.1 ஏனைய இருபத்து நான்கு உருபுகளும் அவற்றின் வடிவங்களும் திரிந்து சங்க நூல்களில் பயின்று வழங்குகின்றன. உரையாசிரியராகிய பேராசிரியரும் நந்த நளிய என்பவற்றிற்கு எடுத்துக்காட்டுகளை அவர் காலத்தில் தர இயலவில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றார்.

14.2. தொல்காப்பியர் கூறாத உருபுகளும் சங்க நூல்களில் காணப்படுகின்றன. இவை சங்க இலக்கியத்தில் காணப்படும் சிறப்பு உருபுகள் எனக் கூறலாம். தொடர்ந்த வழக்கால் இவை சங்க காலத்தில் வழங்கிய உவம உருபுகளாக நின்று விட்டன. அவை பின்வருமாறு.

1. அமர், 2. அவிர், 3. ஆக, 4. இகலிய, 5. இயல், 6. ஈர், 7. உறைக்கும், 8. ஏக்குறும், 9. ஏதம், 10. ஏர், 11. ஒடு, 12. ஒங்கு, 13. ஒர்க்கும், 14. சால, 15. சினைஇய, 16. சேர், 17. செத்து, 18. தேர், 19. தோய், 20. நவில், 21 நாண, 22. நாறு, 23. மலி, 24. மயங்கு, 25. மாய், 26. முரணிய, 27. வாய்ந்த, 28. வவ்வும் இவையே அன்றி இவற்றின் திரிந்த வடிவங்களும் வந்துள்ளன.

14.3. சங்க இலக்கிய உவமைகளுள் இது முக்கியமான மாறுதலாகும். தொல்காப்பியத்தினின்று மாறுபடும் வகையில்