பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சங்க இலக்கியத்தில் உவமைகள்

14.5. தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் இவற்றைப் புதிய மாறுதல் என்பதை ஒப்புக்கொள்ள மறுக் கின்றார் என்பது தெரிகிறது. இவை மயங்கி வருதல் பொதுச் சூத்திரத்தில் அமையும் என்பது அவர் கருத்தாகும்.

14.6. உரையாசிரியர்கூறும் இக் கருத்து ஒப்புக் கொள்ளத் தக்கதாக இல்லை. தொல்காப்பியர் இப்பொதுச் சூத்திரத்தால் உருபுகள் மயங்கி வரும் என்னும் கருத்து உடையவராக இருந்தால் அன்ன என்னும் உருபுக்கு மட்டும் அது பிற வற்றோடு மயங்குதல் கூறத்தேவை இல்லை எனலாம். அன்னவென் கிளவி பிறவொடும் சிவனும்

-தொல் சூ. 288 இச் சூத்திரம் அவர் கூறுவதால் அப் பொதுச் சூத்திரத்தில் மயக்கமும் கூறியதாகக் கொள்ளத் தேவை இல்லை எனலாம்.

14.7. எனவே இவ்வாறு தொல்காப்பியர் ஏற்படுத்திய வரையறை நெகிழ்வு பெற்று ஏனைய இடத்தும் சங்க காலத்தில் பயின்றன என்ற கொள்வதே பொருத்தமாகும். இம்மாறுதல் சங்க இலக்கிய உவமைகளின் தனிச்சிறப்பும் உவம இயலின் சிறப்பு வரலாறும் ஆகும் எனலாம்.

15. உவம உருபும் அவை வரும் இடமும்

உவம உருபுகளின் அமைப்பைப் பற்றியும் அவற்றின் சிறப்பியல்புகள் பற்றியும் தொல்காப்பியத்தோடு சங்க இலக்கிய உவம உருபுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பது பற்றியும் இத் தலைப்பில் மேலே ஆராய்ந்து காட்டப்பட்டன. அவற்றிற்கு ஆதாரமாக அவற்றின் விரிவும் விவரமும் ஈண்டுத் தொடர்ந்து தரப்படுகின்றன.

15.1. சங்க இலக்கியத்தில் பயின்று வழங்கிய உவம உருபுகள் இவை என்பது சங்க நூல்களில் எங்கெங்கே வரு கின்றன என்பதும் அகர வரிசையில் ஈண்டுத் தரப்படுகின்றன.

15.2. சங்க இலக்கியத்தில் வழங்கிய உவமை வடிவங்கள்: 185. அவற்றுள் தனி உருப்புகள்: 151 கூட்டு உருபுகள் : 34 மொத்தம் வழங்கப்பட்ட உருபுகள் 3622 எனக் கணக்கிடப் பட்டுள்ளன. இவற்றுள் அன்ன என்பதும் அதன் பல்வேறு திரிந்த வடிவங்களும் சேர்ந்து 1070; போல், போல முதலியன