பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகங்கள் 67

884, இன் இனம் 627. ஆங்கு 164; என என்று முதலியன 155; புணர முதலியன 116; கடுக்கும், கடுப்ப முதலியன 104; மருள், மருள முதலிய 69; ஏர், நேர், 65; உறழ முதலியன 61; ஏய் ஏய்க்கும் முதலியன51, ஒவ் என்பதன் இனம் 46; செத்து இனம் 29; ஆக ஆகிய முதலியன 23; மான 14, இவையே பயின்று வந்துள்ளன. இவற்றுள்ளும் அன்ன, போல, இன்-இவையே மிகுதிப்பட்ட வழக்கு உடையன என்று அறியப்படுகிறது.

15.3. கீழே கொடுக்கப்பட்டுள்ள தனி உருபுகளை இனம் வாரியாகச் சுருக்கிவிட்டால் சங்க கால உவம உருபுகள் இவை என்று காட்ட முடியும். அவற்றின் அகர வாய்பாட்டு வடிவம் மட்டும் ஈண்டுத் தந்தால் அவற்றைச் சுருக்கிக் காட்ட இயலும். தொல்காப்பியனார் அகர ஈற்று வாய்பாட்டிலேயே உவம உருபுகளை அடுக்கிக் கூறுகின்றார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அகரத்தில் அமையாத ஏனைய உருபுகள் அவ்வவ்வீற்றிலேயே ஈண்டுத் தரப்படுகின்றன. 1. அமர், 2. அவிர், 3. அன்ன, 4. ஆக, 5. ஆங்கு, 6. இகலிய, 7. இயல், 8. இற்று, 9. இன், 10. உருவின, 11. உறழ, 12. உறைக்கும், 13. எதிர், 14. எள்ள, 15. என, 16. ஏக்குறும், 17. ஏசும், 18. ஏய், 19. ஏர், (நேர்), 20. ஒப்ப, 21. ஒங்கு, 22. ஒர்க்கும், 23. கடுப்ப, 24. கொள், 25. சால, 26. சினைஇய, 27. செத்து, 28. சேர், 29. தேர், 30. தோய், 31. நவில், 32. நான, 33. நாறு, 34. நிகர்ப்ப, 35. நிறம், 36. நேர், 37. புரிந்த, 38. புரைய, 39. பொருத, 40. பொற்ப, 41. போல, 42. மயங்கு, 43. மருள, 44. மலி, 45. மாய், 46. மான, 47. முரணிய, 48. வண்ணத்து, 49. வாய்த்த, 50. வீழ், 51. வென்ற ஆகியவற்றைக் காட்டலாம். ஏனைய கூட்டு உருபுகள் இத்தனி உருபுகளோடு சேர்ந்த இணைச் சொற் களாகும். மற்றும் நிறம், வடிவு முதலியவற்றை உணர்த்தும் சொற்களும், ஒப்புமைச் சொற்களும், உறழ் நிலை உணர்த்தும் சொற்களும், மாறு நிலை உணர்த்தும் சொற்களும் துணை வினைகளோடு இயைந்து கூட்டு உருபுகளாக இயங்கியுள்ளன.

15.4. சங்க இலக்கிய உவம உருபுகளின் அமைப்பையும் வடிவங்களையும் ஆராய்வதற்கு அவற்றைத் தொகுத்துக் காண்பது இன்றியமையாதது ஆகும். எனவே அவற்றின் எண்ணிக்கையும் வரும் இடங்களும் இந்நூலின் இறுதியில் பின்னிணைப்பாகத் தனியே தரப்பட்டுள்ளன.