பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 5.

1. சங்க இலக்கிய உவமையும் அதன் வகைகளும்

1. உவமை என்பது பொருளைத் தக்க ஒப்புமை கொண்டு உணர்த்துவதாகும். தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் உவமை இயல் என்னும் பகுதியில் உவமையின் இலக்கணத்தைத் தெளிவுபடுத்துகின்றார். அவர் கருத்தின்படி உவமை என்பது பொருளின் தன்மையைப் புலப்படுத்துவது என்பதாகும். வினை, பயன், மெய், உரு ஆகிய பொருளின் தன்மைகளை உவமைகள் சிறப்பிக்கின்றன என்பது அவர் தரும் விளக்கமாகும்.

'வினைபயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமைத் தோற்றம்”

- தொல். சூ 272

எனத் தொல்காப்பியர் உவமையை வகைப்படுத்திக் காட்டுகின்றார்.

வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கினைப் பண்பு, தொழில், பயன் என மூன்றாக அடக்கிக் காட்டுவர் தண்டியலங்கார நூலாசிரியர்.

"பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந்து ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை"

- தண்டி. சூ. 31

என விளக்கம் தருவர். ஒப்புமை அறிதற்குக் காரணமாய் நிற்கும் பொருளை உவமை என்றும், உவமிக்கப்படும் பொருளைப் பொருள் என்றும் கூறுவர். இவற்றைத் தண்டி உரையாசிரியர் உவமானம் எனவும், உவமேயம் எனவும் குறிப்பிடுவர்.

"புலி போலப் பாய்ந்தான்' என்பது வினை 'மாரியன்ன வண்கை' என்பது பயன்: துடிபோலும் இடை என்பது வடிவு: தளிர்போலும் மேனி என்பது நிறம். இவ் எடுத்துக் காட்டுகளால் நால்வகை உவமைகள் விளக்கப்படுகின்றன." வடிவையும்

1. தண்டி. பக். 38 2. தொல். சூ 272 - இளம்பூரணர் உரை