பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகங்கள் 69

வெறும் உவமைகளே உருவகங்களாக நின்றுவிடுகின்றன. உவமைகளைவிட உருவகங்களே ஆற்றல் மிக்கவை எனலாம்.

5. ஈண்டும் தொகை உருவகம், விரி உருவகம் என இருவகைப் படுத்த முடியும். இரண்டையும் இணைக்கும் உறவுச் சொற்கள் இல்லாமல் தொகைப்படுத்திக் கூறும் பொழுது அவை தொகை உருவகம் ஆகின்றன. ஆக ஆகிய, என்னும், எனப்படும் என்கின்ற உருபுகள் விரிந்து நிற்கும் பொழுது அவை விரி உருவகம் ஆகின்றன. உவமையைப் போல ஈண்டு அதன் பொதுத் தன்மை விரித்துக் கூற இயலும். வினை, பண்பு, மெய், உரு ஆகிய தன்மைகள் விரித்துக் கூறுவதற்கு வாய்ப்பு அமைகின்றது.

6. ஆக, ஆகிய, என்னும், எனப்படும் இந் நான்கு உருபுகளே உருவக உருபுகளாக வந்துள்ளன. இவ் உருபுகளே ஒன்று மற்றொன்றாகியது என்னும் செய்தியைப் புலப்படுத்து கின்றது. எனவே பொருள் உவமையாகவே மாறும் பொழுது அஃது உருவகமாகி விடுகிறது.

6.1 மழைக்கண் (நற் 3/9) என்பது உவமத் தொடர். சினத்தி (பக்/6/31) என்பது உருவகத் தொடர்.

மழைபோலும் குளிர்ந்த கண் என விரிக்க முதல் எடுத்துக்காட்டு இடங்கொடுக்கிறது. அது போல இரண்டாம் எடுத்துக்காட்டில் கண் சினமாகிய கொடிய தி என்று விரிவதற்கு இடம் தருகிறது.

6.2. தொகை உருவகத்திலும் விரி உருவகத்திலும் பொதுத் தன்மைகள் விரித்துக் கூறப்படுவதற்கு வாய்ப்பு அமைகின்றது. ஒரு சிலவற்றுள் அப்பொதுத் தன்மை வற் புறுத்தப்படுகின்றன.

கூந்தல் மெல்லணைத் துஞ்சி. - அகம். 308/13

இத்தொகை உவமத்தில் மென்மைத் தன்மை விரித்துக் கூறப்பட்டுள்ளது.

கல்வி என்னும் வல்லாண் சிறா அன், -புறம். 346/3

இவ்விரி உவமத்தில் வன்மை என்னும் பொதுத்தன்மை விரிக்கப்பட்டுள்ளது.

7. உருவகங்களின் வகைகளைப் பலவகையாகத் தண்டி யலங்காரம், மாறனலங்காரம் ஆகியவை விரித்துத் கூறும்.