பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சங்க இலக்கியத்தில் உவமைகள்

எனினும் அவற்றைக் கொண்டு சங்க இலக்கிய உருவகங் களைப் பொருத்திக் காண வாய்ப்புக் கிடைக்கவில்லை அவ்வளவு விரிவான முறையில் பல்வகை மாறுபாடுகளோடு அவ் உருவகங்கள் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. உள்ளே கிடைக்கும் உருவக அமைப்புகளைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1. ஒரே ஒரு பொருளுக்கு ஒரே ஒரு உருவகம் அமைத்தல். இதனைத் தனிநிலை உருவகம் (Simple metophor) எனக் கூறலாம். 2. உருவகங்களுள் தொடர்ச்சி கண்டு அவற்றை இணைத்து ஒரு முழுமைக் காட்சியாக அமைக்கலாம். இதனை முற்று உருவகம் (Complete metaphor) என்று கூறலாம். 3. உருவகங்களை மட்டும் கூறிப் பொருள்களைக் கூறாமல் விடுதல் என்பதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன. இவற்றை ஒரு சார் உருவகம் (Partial metaphor) என்று கூறலாம். 4. உருவகங்கள் தேய்ந்து பயில்வுச் சொற்களாக வழங்குதல் காணப்படுகிறது. இதனைத் தேய்ந்த உருவகம் (Faded melaphor) என்று கூறலாம். இந் நால்வகை அமைப்புகளில் உருவகங் களை ஆராய்ந்து காட்டலாம்.

7.1. தனிநிலை உருவகங்கள்

இவை ஒரு சிலவே சங்க இலக்கியத்தில கிடைக்கின்றன. உவமைகளை விட இவை ஆற்றல் பெற்றவைகளாக இயங்கு கின்றன. உணர்வும் சித்திர அழகும் நிறைந்த சொல்லோ வியங்களாக இவை வழங்குகின்றன.

7.1.1. அருவி நீர் ஒழுகுதல் கண்ணிருக்கு உவமிக்கப் பட்டுள்ளது. அதனையே உருவகமாகக் கூறும் பொழுது அருவி நீரைக் கண்ணிராகவே கூறி உருவகம் அமைத்துள்ளார். உவமையை விட உருவகம் ஆற்றல் பெற்று விளங்குகிறது என்பது கீழ்வரும் சான்று காட்டும் இயல்பினது.

கண்ணிர் அருவியாக அழுமே தோழி. -நற். 88/8 7.1.2. இதே போன்ற கருத்தும் உணர்வும் மிக்க உருவகம் கலித்தொகையில் அமைந்துள்ளது. கண்ணிர் அலைகடலாக உருவகிக்கப்பட்டுள்ளது.

கண்ணிர்க் கடலால் கனைதுளி வீசாயோ கொண்மூக் குழிஇ முகந்து. -கலி. 145/21-22