பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சங்க இலக்கியத்தில் உவமைகள் 7.2. முற்று உருவகங்கள்

தனிநிலைக் காட்சிகளை விடத் தொகுநிலைக்காட்சிகள் ஒரு முழுமையான சொல்லோவியமாகக் காட்சி அளிக்கிறது. இவற்றை முழுமையாகக் காட்டுவதில் கவிஞன் வெற்றி காண வேண்டும் என்னும் விழைவு அதனுடன் கலந்து இயைகிறது. ஒரே பொருளுக்கு ஒரே ஒரு உருவகம் அமைப்பது எளிது. அவற்றோடு தொடர்புடைய உருவகங்ளை அமைப்பது அவன் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவன் ஒரு முழு ஒவியமாகக் காட்டுவதில் வெற்றி காண்கின்றான். இம் முழுக்காட்சிகளில் இயற்கையை ஆடற்பாடற் கலைகளுக்கு உருவகப்படுத்தலும், போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப் படுத்தலும் பொருள் மரபுகளாக அமைந்துள்ளன. பின்னதை 'ஏர்க்கள உருவகம் என்னும் மரபுச் சொல்லால் குறிப்பதும் வழக்கமாகி விட்டது.

7.2.1. இயற்கையைக் கலை நிகழ்ச்சியாக உருவகித்தல்

இயற்கைக் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஆடல் பாடலும் நிரம்பிய ஒர் கலைக்காட்சிக்கு உருவகப்படுத்தி யுள்ளனர். இஃது ஒரு முழுமைக் காட்சியாக நின்று முற்றுருவகத் திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

'மூங்கிலில் அமைந்த துளையில் கோடைக் காற்றுப் புகுந்து குழலிசையாகவும், இனிய அருவியிசை முழவின் குரலாகவும், கணக்கலையை அழைக்கும் குரல் தூம்பாகவும், சாரல் வண்டு யாழாகவும், இனிய பல இசைகளைக் கேட்டு மகிழும் மந்திகள் பார்வையாளராகவும், மேகம் தவழும் மலைப் பகுதிகளில் ஆடும் மயில்கள் விறலியராகவும் காட்சியளித்தன. என்று கூறப்படுகிறது.

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுரலாகக் கணக்கலை இகுக்கும் கடுக்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து "மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலியாடும் மயில்

நவைப்புகு விறலியின் தோன்றும். -அகம். 82/1-10.