பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகங்கள் 73

7.2.2. ஏர்க்கள உருவகம்

போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகித்தல் புறநானூற்றில் பயின்றுவரும் துறையாக அமைந்துள்ளது. முழுமையும் உருவகப்படுத்தும் பொழுது இடையில் சில உவமைகள் மிக்கு முழுநிலைக் காட்சியைத் தருகிறது. இதனை ஏர்க்கள உருவகம் என்று கூறியுள்ளனர்.

யானை மேகங்களாகவும், வீரரின் வாள் மின்னலாகவும், முரசு முழக்காகவும், குதிரைகள் வீசும் காற்றாகவும், அம்புகள் மழையாகவும், போர்க்களம் வயற்களமாகவும், தேர்கள் ஏர்க் களமாகவும், வேலும் கணையமும் விதைகளாகவும், தலைகள் சாய்ந்த பிணங்கள் பசுமையான பயிராகவும், பேய்கள் பற்றிய பிணக்குவியல் நெற்போர்வையாகவும், நரிக்கூட்டமும் கழுகு களும் அப்பிணக்குவியலைக் களத்திலே போட்டு மிதிக்க, பூதங்கள் காவல் செய்ய, இப்பல்வகைக் காட்சிகளோடு அப் போர்க்களம் ஏர்க்களமாக உருவகிக்கப் பட்டுள்ளது. (புறம் 369||1-70)

இதைப் போன்ற உருவகக் காட்சிகள் வேறு சில புறநானூற்றுப் பாடல்களிலும் மரபாக வழங்குகின்றன. 7.3. ஒருசார் உருவகங்கள்

இவ் ஒருசார் உருவகங்களில் உவமை மட்டும் கூறப் படுகிறது. பொருளைப் பற்றிய வருணனை அமைவது இல்லை. சூழ்நிலை பொருளினை உணர்த்த அமைகிறது. உவமை வாக்கியங்களில் பொருள் இருக்க வேண்டிய இடத்தில் நிலை பெறுகின்றது. உருவகமே பொருளாக இருந்து செயல் படுகின்றது. முத்தம் புன்னை மரத்தில் அரும்புவதாக அக நூனுற்றுப் பாடல் கூறுகின்றது. இது ஒருசார் உருவகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

முத்தம் அரும்பிய புன்னை. -அகம். 30/13 முத்து புன்னையின் அரும்புக்கு உவமை ஆகியதைப் போலக் கண்ணிருக்கும் உவமை ஆகியுள்ளது. அதனை உருவகமாகக் கூறும் காட்சி மற்றோரிடத்தில் அமைந்துள்ளது.

முத்தம் ஒழுக்கிய வனமுலை. -அகம். 247/1

7.3.1. இவ்வாறே ஐங்குறுநூற்றில் ஒருசார் உருவகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

1. புறம், 370/12-9; 371/13-16; 373/1-4.