பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகங்கள் 75 7.4. தேய்த்த உருவகங்கள்

சில உருவகங்கள் தமக்குரிய பொருளை இழந்து பயின்ற வழக்கால் அது உணர்த்தும் தன்மையை மட்டும் குறிக்கத் தொடங்குகின்றன. இவற்றைத் தேய்ந்த உருவகங்கள் என்று கூறலாம். இவையும் பெருகிய வழக்காக உள்ளன.

7.4.1. குழவி என்னும் சொல் இளமைப் பருவத்தை உணர்த்தும் சொல்லாகும். மக்கட் குழந்தைகளையே குழவி என்னும் சொல்லால் குறிப்பிடுவர். தொடக்கம் என்னும் பொருளில் குழவி என்னும் சொல் பயின்ற வழக்கால் வழங்கப் பட்டுள்ளது. பிறைச்சந்திரனைக் குழவித் திங்கள் என்றும், திங்கட் குழவி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே போலத் தொடக்கப் பருவமாகிய வேனிற் பருவத்தைக் குழவி வேனில் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

7.4.2. முகைப் பருவத்தினின்று மலரும் நிலையில் உள்ள பூக்களைக் குமரி ஞாழல் குமரி வாகை" என்று குறிப்பிட்டுள்ளனர். தோல்வியைக் காணாத புதிய போர்ப் படையைக் குமரிப்படை என்றும், அதே போல எடுக்க எளிதில் குறையாத நெற்களஞ்சியத்தைக் குமரி மூத்த கூடு” என்றும் வழங்கியுள்ளனர். இளம் விடியற் காலைப் பொழுது கன்னி விடியல்' என்னும் தொடரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

7.4.3. நிலத்தை மடந்தையாக அதன் தாய்மை உணர்வு தோன்ற உருவகித்தல் வழக்கமாக உள்ளது. நிலமகள்." மாநில மடந்தை4 என்ற வழக்குகள் உள்ளன.

7.4.4. பூக்கள் 'மலர்ந்தன என்று வெளிப்படையாகக் கூற வேண்டிய செய்தியைத் 'கண் விழித்தன என்னும் உருவகத் தொடரால் குறிப்பிட்டு உள்ளனர். கண் விழித்தல் என்பது இதழ்கள் விரிதலுக்கு உவமையாகி வந்துள்ளது.

7.4.5. பூத்தல் என்னும் சொல் ஒளிவிடுதல், நிறைதல், வளம் பெருகல், அழகோடு விளங்குதல் என்னும் பொருள் களில் வழங்கியுள்ளது.

பொன் பூப்ப(ஒளிவிடுதல்) -புறம். 38/5 பூத்த சுற்றம் (மகிழ்வு நிறைதல்) -பதிற். 90/81 பூத்த என் கடும்பு (மகிழ்வு நிறைதல்) -புறம். 380/18

1. கலி. 103/15; பக். 4/384; கலி, 80|18 2. கலி, 36/9. - 3. நற். 549-10. 4. குறு. 347|2-3 5. பத். 4|247. 6. பத். 4|247. 7. ஐங். 68/1-2 8. புறம், 365/10.

ན་།