பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகங்கள் 77

சுரம் நீந்தி -அகம். 103/10 பனியிருள் கங்குலும் தமியள் நீந்தி -அகம். 103/10 விழுமம் நீந்துமோ -அகம். 170/13-14

7.4.10. அமுதம் என்னும் சொல் உணவு என்னும் பொருளில் பயின்று வழங்குகிறது. கடலில் விளையும்

உப்பைக் கடல் விளை அமுதம் என்பர்.

(நற். 8814; அகம். 16916)

7.4.11. உழவுத் தொழில் என்பது நிலத்தில் உழுது உண்டு வாழும் தொழிலுக்கு வழங்கும் சொல்லாகும். இதனை ஏனைய தொழில்களுக்கும் சிறப்பு அடை கொடுத்து வழங்கியுள்ளனர்.

வில்லேர் உழவர் (அரசர்) -நற் 3/5, புறம் 371/13 புலன் நா உழவர் (புலவர்) -கலி, 68/4 வாளேர் உழவன் (வீரன்) -புறம். 368/13 படையேர் உழவன் (வீரன்) -பதி. 14/17

வானம் வேண்டா உழவு (உப்புத் தொழில்)

நற்.-254/11; 331/1 வானம் வேண்டா உழவு (வழிப்பறி) -அகம். 193/2; -பதி. 15/12

7.4.12. வித்துதல் என்னும் சொல் உழுதொழிலோடு தொடர்புடையதாகும். விதை விதைத்தல் என்னும் பொருளை யுடைய இச் சொல் புலவர்களின் அறிவுரை கூறப்படுதலுக்கும் வழங்குகிறது.

வள்ளியோர் செவி முதல் வித்தி -புறம். 206/2

8. ஆக, சங்க இலக்கிய உருவகங்கள் இந் நால் வகை நிலையில் ஆராய இடந் தருகின்றன. இவை தற் சார்பால் அமைந்த பிரிவுகளாகும். வேறு வகையாகவும் இவற்றின் அடிப்படைகள் ஆராய இடந் தரலாம். எனினும் பிற்காலத்துப் பிரிவுகளைக் கொண்டு ஆராயும் பொழுது சங்க இலக்கிய உருவகங்கள் பெரிதும் வாய்ப்பு அளிக்கவில்லை. இவ் உரு வகங்கள் இயல்பாக அமைந்தனவே அன்றிச் செயற்கையாகக் கற்பனை ஆற்றலால் படைக்கப்பட்டவை அல்ல என்பது தெரிகிறது. வலிந்து உருவகிக்கும் இயல்பு யாண்டும் காணப்பட வில்லை என்பதும், மரபு வழியாகப் போற்றப்பட்ட உருவகங் களே இடம் பெற்றன என்பதும் தெளிவாகின்றன.