பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சங்க இலக்கியத்தில் உவமைகள்

நிறத்தையும் பண்பு என்னும் பொதுச் சொல்லால் தண்டி ஆசிரியர் குறிப்பிடுவர்.

2. உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொரு ளாகும்; பொருள் என்பது அவன் காணும் புதிய பொருளாகும். அவன் ஏற்கனவே கண்டு வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்திவைத்து அப்பொருளின் உயர்வு தாழ்வுகளை அளந்து அறிவிக்கின்றான் எனக் கூறலாம். பொதுவாகப் பொருளின் சிறப்பை வற்புறுத்தவே உவமை அமைக்கப்படுகிறது. அதன் உயர்வைக் காட்ட அதனினும் உயர்ந்த பொருளையே வரையறையாக அமைக்க வேண்டி யுள்ளது. எனவே உவமை பொருளைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கருத்தை ஆசிரியர் தொல்காப்பியனார் வற்புறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை”

- தொல், சூ. 274

என்பது அவர் தரும் குறிப்பு ஆகும்.

'அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்'

ன்ன்றவழித் துப்புடையன பலவற்றினும் அரிமா உயர்ந்த தாகலின் அஃது உமையாகக் கூறப்பட்டது என்று இளம்பூரணர் காட்டுவர். மற்றும், தாமரை புரையும் காமர் சேவடி என்ற வழிச் சிவப்புடைய பலவற்றினும் தாமரை உயர்ந்ததாதலின் அஃது உவமையாகக் கூறப்பட்டது' என்று மேலும் விளக்கம் தருகிறார்.

3. மற்றும் உவமை என்பது உயர்ந்த பொருளாக வரும் என்பதோடு அது சிறப்பு, நலன், காதல், வலி ஆகிய சிறப்பு களால் அமைகின்றது என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

'சிறப்பே நலனே காதல் வலியொடு

அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப"

-தொல். சூ. 275

1. பத். 9/298

2. குறுந் கடவுள் வாழ்த்து 3. தொல் உவமை இயல் உரை - இளம்பூரணர். -பக் 397