பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சங்க இலக்கியத்தில் உவமைகள்

4. உவமையின் சொல்லியல் மரபுகள்

1. சங்க கால உவமைகளில் ஒரு சில சொல்லியல் மரபுகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு:

1. பிறழ்வுபட உணர்தலாகக் கூறல்

2. துணைப்புணர் உத்தி

3. வாழ்த்தியல் மரபுகள்

4. எண்ணியல் மரபுகள்

5. சொற்பொருள் மாறல்

6. மிகைபடக் கூறல்

7. இயல்படக் கூறல்

8. சார்த்திக் கூறல்

9. சொற்றொடர் பயில்வு

இவை சங்க இலக்கிய உவமைகளுள் காணப்படும் சிறப் பியல்புகளாகும். உவமைகளைக் கூறுமிடத்து எடுத்தாளப் பெற்ற உத்திகளாக இவற்றைக் கருதலாம்.

1.1. பிறழ்வுபட உணர்தலாகக் கூறுதல்

ஒரு குறிப்பிட்ட பொருள் பிறழ உணரப்படுவதாகக் கூறப்படுகிறது. பூத்த வேங்கை புலியைப் போல் காட்சி அளிக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் யானை வேங்கை மரத்தைப் புலி எனப் பிறழ உணர்ந்து அதனைத் தாக்குகிறது என்று கூறப்படுகிறது. இங்குப்பிறழ உணர்தல் என்னும் உத்தி கையாளப்படுகிறது. இவ் உத்தி மற்றும் பல இடங்களில் பல்வேறு வகையான காட்சிகளில் அமைக்கப்படுகிறது. இவ் உத்தியை இருவகையாகப் பிரித்துக் காட்டலாம். ஒசையில் பிறழ உணர்தல்; வடிவில் பிறழ உணர்தல்.

1.1.1. பெண்ணின் குரலைக் கிளியாகவும் வண்டின் ஒலியை யாழிசையாகவும், யாழிசையை வண்டின் முரல்

1. கலி. 49/1-9; அகம் 12/11-12; 228/10.12.

2. நற். 141/5, 209/5-6; குறு. 29.1/1-4; ஐங், 289/1. 3. நற் 244/3-4; அகம். 88/9-12.