பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 81

நீண்ட புகழ்மிக்க வாழ்வைப் பெற வேண்டும் என்பது அவர்கள் வாழ்த்துரையாகும். அப்புகழ்மிக்க நீண்ட வாழ்க்கைக்கு ஒரு சில வழக்கமான பொருள்கள் உவமைப்படுத்தப் பட்டன. உயர்ந்த மலைகளாகிய இமயமும், பொதிகையும், சேர நாட்டைச் சேர்ந்த அயிரையும் அவர்கள் நீண்ட வாழ்க்கைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

1.3.1. அரசர்களின் புகழ் பெற்ற நிலைபேறான வாழ்க்கைக்கு ஞாயிறும் திங்களும் உடன் இை யத்தும் தனித்தும் உவமையாகக் கூறப்பட்டன.

1.3.2. அவர்கள் முந்தையோர்களைப் போலவே சிறந்து புகழ் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்ற மரபும் எடுத்து ஆளப்பட்டுள்ளது: ஒரே ஒர் இடத்தில் மட்டும் அரசன் ஒருவன் சிவபெருமானைப் போல நிலைத்த வாழ்க்கையைப் பெற வேண்டும் என்று வாழ்த்தப்படுகின்றான்."

1.3.3. அரசர்கள் எல்லையற்ற நாள்கள் பெற்று நீண்ட ஆயுள் உடையவர்களாக வாழ வேண்டும் என்று வாழ்த்தப் பட்டனர். அந்த நீண்ட வாழ்க்கையைக் குறிக்க ஒரு சில எண் னிக்கை மரபுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் மழைத் துளிகளைப் போலவும்: மணல் பெருக்கைப் போலவும், நெல் குவியலைப் போலவும் விண்மீன்களைப் போலவும்" வாழ வேண்டும் என்று வாழ்த்தினர். கபிலர் என்னும் புலவர் பரிசிலாகப் பெற்ற ஊர்களும் எண்ணிக்கைப் பொருளாக வாழ்த்தியல் மரபில் குறிக்கப்பட்டுள்ளது.”

1.3.4. இவ் எண்ணிக்கை உவமைச் சொற்கள் இடத் தோடும், குறிப்பிட்ட சூழ்நிலையோடும் தொடர்பு படுத்தப்

1. புறம். 2,24-25; 166|32-34; 2/24-25 பதி. 6:20-26; 9:18-19 2. புறம். 6/27-29; 56/23.5; பத்-6/768-70, 81. 3. ஞாயிறு-பதி 88/38-39; திங்கள்-பதி. 90/17-18; புறம், 396/26-29 4. பதி. 14/20.22; 85/10-13

5. புறம். 91/5-7, 6. பதி. 55/12-16; 21, புறம். 198/18-23; 367,16-18 385/10-12. 7. புறம். 198/18.23.

8. புறம். 387/28-36.

9. புறம், 37124-25, 367,116-18.

10. பதி. 86/10.13.